India news in Tamil: குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர உரையாற்றினார். அதில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசியதோடு, இது போன்ற விவசாய சீரமைப்புகளைக் கொண்டு வர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான் முன்னோடி என்று மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
"குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) இருந்தது, இருக்கும், மற்றும் தொடரும். அதோடு ஏழைகளுக்கு மலிவு விலையில் ரேஷன் வழங்குவதும் தொடரும். மற்றும் விவசாய மண்டிகள் நவீன மயமாக்கப்படும்" என்று கூறியுள்ள பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டங்கள் பற்றி எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியதோடு, பின்னவருமாறு மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
"முன்னாள் பிரதமர் மன்மோகன் இந்த அவையில் இருக்கிறார். புதிய வேளாண் சட்டத்தில் யு-டர்ன் செய்ப்பவர்கள் அனைவரும் ஒருவேளை அவருடன் உடன்படுவார்கள். 1930 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டங்களினால், இங்கு பல வித சிக்கல்கள் உள்ளன. அந்த சட்டங்கள் நமது விவசாயிகள் விளைபொருட்களை விற்பதன் மூலம் அதிக வருமானம் பெறுவதை தடுத்தது. இது போன்ற சட்டங்களை நீக்கி ஒரு பரந்த, பெரிய மற்றும் பொதுவான சந்தையை உருவாக்கவதே எங்கள் நோக்கம். இது தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நோக்கமாகவும் இருந்தது. அவரின் அந்த கனவை மோடி செயல்படுத்துகிறார் என்பதில் நீங்கள் தான் (எதிர்க்கட்சிகள்) பெருமைப்பட வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
முன்னாள் விவசாய துறை அமைச்சர் சரத் பவாரும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவர்களும் வேளாண் சீர்திருத்தங்களை ஏதேனும் ஒரு வடிவத்தில் ஆதரித்து பேசியுள்ளனர். அதோடு அவர்களால் அதைக் செய்ய முடிந்ததோ இல்லையோ, அதைக் கொண்டு வர வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தார்கள்" என்று கூறியுள்ளார்.
பின்னர் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டதை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, "சாலைகள் இணைப்பு மேம்படும்போது, விவசாயிகளின் விளைபொருட்களை தொலைதூர இடங்களை எளிமையாக அடைய இயலும். அதற்கு இந்த திட்டம் உதவதோடு கிசான் ரயில் திட்டம் போன்ற முயற்சிகளும் உள்ளன. சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு தேவையான நேரத்தில் இந்த திட்டங்கள் உதவும் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil