அணு ஆயுதங்களின் இருப்பை அதிகரிக்கும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் – சர்வதேச அமைப்பு அறிக்கை

India nuclear weapons : இந்தியாவிடம், 2019ம் ஆண்டில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் இருந்தநிலையில், 2020ம் ஆண்டில் இது 150 ஆக அதிகரித்துள்ளது.

By: Updated: June 16, 2020, 04:12:42 PM

இந்தியா மட்டுமல்லாது அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளாகவே, அணுஆயுதங்களின் இருப்பை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாக சர்வதேச திங்டாங் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும், பாகிஸ்தானும், இந்தியாவை விட, அதிகளவில் அணுஆயுதங்களை, தங்களது நாட்டில் வைத்திருப்பதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)), சர்வதேச நாடுகளிடையே ஆயுதம் மற்றும் மோதல்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த அமைப்பு, தன்னுடைய வருடாந்திர ஆண்டறிக்கையில், நாடுகள் வைத்துள்ள அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் கொண்ட 9 நாடுகளில், 2019ம் ஆண்டில் 13,865 அணு ஆயுதங்கள் இருந்தநிலையில், 2020ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 13,400 ஆக சரிவடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகள், தங்களது அணு ஆயுத இருப்பை குறைத்ததே இந்த சரிவிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் உள்ள அணு ஆயுதங்களில், இவ்விரு நாடுகள் மட்டுமே 90 சதவீதம் தங்களுக்குள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ரஷ்யா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா உள்ளிட்ட 9 நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை தன்னிடத்தே கொண்டுள்ளன. இந்த நாடுகள் வைத்துள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை பொதுவெளியில் வெளியிட்டுள்ள நிலையில், வடகொரியா மட்டும், தங்களது இருப்பை வெளியிடவில்லை. இருந்தபோதிலும், வடகொரியாவிடம் 30 முதல் 40 அணு ஆயுதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிடம், 2019ம் ஆண்டில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் இருந்தநிலையில், 2020ம் ஆண்டில் இது 150 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தாவில், கடந்தாண்டில் 150 முதல் 160 அணு ஆயுதங்கள் இருந்தநிலையில், தற்போது 160 உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில், சீனாவிடம் 290 அணு ஆயுதங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2020ம் ஆண்டில், இதன் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச திங்டாங் அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள், தங்களது ஆயுதங்களை தொடர்ந்து நவீனப்படுத்தி வருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதில், சீனா, அணு ஆயுதங்களையும் நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Report: India, China, Pakistan increased nuclear stockpile in past year

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:India nulcear stockpile china pakistan international thinktank sipri india nuclear weapons

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X