இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
Advertisment
நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. சுமார் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 141 , கேரளாவில் 57, குஜராத்தில் 49, ராஜஸ்தானில் 43, தெலங்கானாவில் 41, தமிழ்நாட்டில் 34, கர்நாடகாவில் 31 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 24 நேரத்தில் நாட்டில் 6,531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பிலிருந்து 7,141 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 74,841 ஆக குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் ஆக்டிவ் கேஸ்கள் 1 விழுக்காடுக்கும் குறைவாக உள்ளது. இது மார்ச் 2020 முதல் மிகக் குறைவாக பதிவான எண்ணிக்கையாகும்.
அதேபோல், குணமடைந்தோர் விகிதம் தற்போது 98 சதவீதமாக உள்ளது. இது 2020 மார்ச் முதல் அதிகபட்ச சதவீதம் ஆகும்.
இதுவரை நாடு முழுவதும் 141.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல், 67.29 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 7 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil