/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1571.jpg)
india pakistan cancels samjhauta express operation - பாகிஸ்தானை தொடர்ந்து சம்ஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் சேவையை நிறுத்திய இந்தியா
சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், புது டெல்லிக்கும் இயக்கப்பட்டு வந்தது. காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் எல்லையில் இந்த ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது. இந்நிலையில், அதன் சேவையை தற்காலிகமாக இந்தியா தற்போது நிறுத்தியுள்ளது.
லாகூரில் இருந்து அடாரி வரை பயணம் செய்யும் சமஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் 14607/14608 முன்பு பாகிஸ்தானால் கேன்சல் செய்யப்பட்டது. அதேபோல், டெல்லி மற்றும் அடாரியை இணைக்கும் 14001/14002 வழித்தட சேவையும் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழன் அன்று, லாகூர் - டெல்லி ரயில் சேவை நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்த நிலையில், பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷித், இந்த ரயில் சேவை தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1570-300x217.jpg)
இதுகுறித்து அவர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் ரயில்வே அமைச்சராக இருக்கும் வரையில், சம்ஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்படாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், 'ஒருதலைபட்சமாக முடிவு' என்று கூறியது. மேலும், "நாங்கள் ஒருபோதும் இதைக் கேட்கவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்ற கதைக்கு பசியாற்றும் நோக்கில் பாகிஸ்தான் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு வருந்துகிறோம்" என்று கூறியது.
இதைத் தொடர்ந்து, இந்தியா தற்போது சமஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் சேவையை நிறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.