Sushant Singh
இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாடுப் பகுதியில் உருவாகியுள்ள மோதல் போக்கு தீவிரத்தன்மையோடு காணப்படுகிறது. ஒரே நேரத்தில் இருநாட்டு ராணுவப் படைகளை இந்தியா ராணுவம் சந்தித்து வருகிறதோ? என்ற ஐயத்தையும் மனதில் எழுப்புகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமாக தொடர்கின்றன.
மே, ஜூன் ஆகிய இரு மாதங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் முறையே 382, 302 போர்நிறுத்த மீறல்கள் (சி.எஃப்.வி) பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதங்களில் பதிவான போர்நிறுத்த மீறல்கள் எண்ணிக்கை 221 மற்றும் 181 ஆக உள்ளது .
எல்லையில், பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல்ககளை எதிர்த்துப் போராடுவதில் பாதுகாப்புப் படையினர் சமமாக ஈடுபட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகளின் மூலம் 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு ஜூன் 25 வரை 2215 போர்நிறுத்த மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதனை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றது.
2019-ல், 3168 விதிமீறல்களும், 2018-ல் மொத்தம் 1629 விதிமீறல்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்தில் இருந்து எல்லைப் பகுதியில் போர் நிறுத்த அத்துமீறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்," எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விதிமீரல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது உண்மை தான். இந்த போக்கு, விரைவில் குறையும் என்பது தற்போது சாத்தியமில்லை. இந்த கோடைகாலத்தில் காஷ்மீர் பகுதியில் பதட்டத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட பாகிஸ்தான் இராணுவம் எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் ஆர்வமாக உள்ளது. எல்லைப் பகுதியில் அதன் நடவடிக்கைகளுக்கு நாங்கள் நல்ல அளவில் பதிலளிக்கிறோம், ”என்று கூறினார்.
சினார் படைப்பிரிவு தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு ஏப்ரல் 30 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவிக்கையில் “காஷ்மீரில் இயல்புநிலையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ச்சியான போர் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. எல்லைத் தாண்டிய தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக உதவி புரிகிறது. அதன் நடவடிக்கைகள் எந்த நேரத்திலும் மாறப்போவதில்லை" என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை அடுத்து மொபைல் தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் முடக்கப்பட்டன. இதன் காரணமாக, பாதுகாப்புப் படையினருக்கான உளவுத்துறை உள்ளீடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை மோசமாக பாதித்தது" என்று தெரிவித்தார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இந்த ஆண்டு ஜூன் 25 வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் 119 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நடப்பு மாதத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 41ஆக உள்ளது. 2019 ல் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 158 ஆகவும், 2018 ல் 254 ஆகவும், 2017 ல் 213 ஆகவும் உள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றிய லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) சுப்ரதா சஹா கூறுகையில், “ எல்லைப் பகுதியில் சீனாவுக்கு எதிரான பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றது ” என்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாகிஸ்தான்- சீனா என இரு எல்லை முனைகளிலும் இந்திய இராணுவம் தாக்குதலை சந்தித்து வருகிறது என்ற கோணத்தில் பார்க்கத் தேவையில்லை என இராணுவ அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
It is just not the LAC with China that is 'hot'. The LoC with Pakistan also continues to remain active, with 302 ceasefire violations in 25 days of June itself. And the Army has increased the tempo of its counter-militancy operations in Kashmir. My report https://t.co/S0pCLSPF45
— Sushant Singh (@SushantSin) June 30, 2020
மே 15 அன்று மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனலைசிஸில் (எம்.பி.ஐ.டி.எஸ்.ஏ) பேசிய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே, இரு முனை யுத்தம் “ஒரு சாத்தியம்” என்று கூறினார். இருப்பினும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் இது சாத்தியம் அல்ல. நடக்கக்கூடிய அனைத்து தற்செயல்களுக்கும், பல்வேறு நிகழ்வுகளுக்கும் நாம் உயிரோட்டம் கொடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.
இருப்பினும், பாகிஸ்தான்- சீனா என இரு முனைகளிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் 100 சதவிகிதம் எல்லை மோதல் இருக்கும் என்று கருதுவது, ஒரு தவறான அனுமானமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று மனோஜ் முகுந்த் நாரவனே தெரிவித்தார்.
இரு முனைகளில் தாக்குதல் எதிர்கொள்வதை இந்திய இராணுவத்தின் பொறுப்பாக மட்டும் பார்க்கக்கூடாது. ஒரு நாடு தனது ஆயுதப் படைகளுடன் மட்டும் போருக்குச் செல்வதில்லை. எல்லையில் ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை சமாளிக்க வேண்டிய சூழலில் ராணுவம் தள்ளப்படாமல் இருப்பதை, இராஜதந்திர நடவடிக்கைகள் உறுதி செய்ய வேண்டும்" என்று ராணுவத் தலைவர் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.