நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கும் வகையில், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை விரைவாக இணைக்கும் வகையில் 9 வந்தே பாரத் ரயில் சேவையை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் உதய்பூர் – ஜெய்ப்பூர், திருநெல்வேலி-மதுரை – சென்னை, ஹைதராபாத் – பெங்களூரு, விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா – ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம்; ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி; ராஞ்சி - ஹவுரா; மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய வழிகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குதல் ஆகிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் ஒரு படியாகும்.
மேலும் "வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் வழித்தடங்களில் வேகமான ரயிலாக இருக்கும் மற்றும் பயணிகளின் பயண நேரத்தை கணிசமான மிச்சப்படுத்த உதவும்" என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் ஆகிய வழித்தடத்தில் தற்போது பயணிக்கும் அதிவேக ரயிலுடன் ஒப்பிடுகையில், வந்தே பாரத் ரயில்கள் அந்தந்த இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை சுமார் மூன்று மணிநேரம் குறைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஹைதராபாத் - பெங்களூரு 2.5 மணி நேரத்திற்கும் மேலாகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை இடையே 2 மணி நேரத்திற்கும் மேலாகவும் குறைக்கும் ராஞ்சி – ஹவுரா, பாட்னா - ஹவுரா மற்றும் ஜாம்நகர் - அகமதாபாத் இடையேயான பயண நேரம், இந்த இடங்களுக்கு இடையே தற்போது கிடைக்கும் அதிவேக ரயில்களுடன் ஒப்பிடும் போது, ஒரு மணிநேரம் குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்து.. உதய்பூர் - ஜெய்ப்பூர் இடையே பயண நேரம் சுமார் அரை மணி நேரம் குறைவாகும்.
ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி மற்றும் திருநெல்வேலி-மதுரை-சென்னை ரயில்கள் முக்கிய மத நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், ரேணிகுண்டா வழித்தடத்தில் இயக்கப்பட்டு, திருப்பதி கோவில் வரை இணைக்கும். இந்த வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் நாட்டில் புதிய தரமான ரயில் சேவையை அறிவிக்கும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயிலில், கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், சாதாரண மக்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள், மாணவர் சமூகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன, விரைவான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்வதற்கு முக்கிய படியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.