இந்தியா அகிம்சையைப் பற்றி பேசும், ஆனால் தடியையும் தாங்கும், உலகம் சக்தியை மட்டுமே புரிந்துகொள்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
ஹரித்வாரில் புனிதர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பகவத், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தர்களின் ”இந்திய கனவு” இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் என்றார்.
நீங்கள் 20-25 வருடங்கள் பேசினீர்கள், ஆனால் நாங்கள் எங்கள் வேகத்தை அதிகரித்தால், நான் 10-15 ஆண்டுகள் என்று சொல்கிறேன். அந்த காலகட்டத்தில், சுவாமி விவேகானந்தரும் மகரிஷி அரவிந்தரும் கற்பனை செய்த இந்தியாவைப் பார்ப்போம்.
உறுதியுடன் ஒன்றுபட்டால் சமூகம் அதன் இலக்கை அடைய முடியும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அடைய முடியாது. என்னிடம் அதிகாரம் இல்லை... அது மக்களிடம் உள்ளது. கட்டுப்பாடு அவர்களிடம் உள்ளது. அவர்கள் தயாராக இருக்கும்போது, அனைவரின் நடத்தையும் மாறுகிறது.
அச்சமின்றி, சேர்ந்து நடப்போம். அகிம்சை பற்றி பேசுவோம், ஆனால் தடியுடன் நடப்போம். அந்த குச்சி கனமானதாக இருக்கும்.
“எங்களுக்கு யாருடனும் வெறுப்போ, பகையோ இல்லை. உலகம் சக்தியை மட்டுமே புரிந்து கொள்கிறது. நமக்கு பலம் இருக்க வேண்டும், அது அனைவருக்கு தெரிய வேண்டும்.
இந்து ராஷ்டிரம் என்பது சனாதன தர்மம் அல்ல. மதத்தின் நோக்கங்கள் தான் இந்தியாவின் நோக்கங்கள். சுவாமி விவேகானந்தர் மதமே இந்தியாவின் உயிர் என்றார். மத முன்னேற்றம் இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை. சனாதன தர்மம் என்பது இந்து ராஷ்டிரம் மட்டுமே. இந்தியாவின் முன்னேற்றம் உறுதி.
இந்தியா தனது முன்னேற்றப் பயணத்தைத் தொடங்கிவிட்டது, அதை இப்போது நிறுத்த முடியாது. அதை நிறுத்த விரும்புவோர் அகற்றப்படுவார்கள் அல்லது முடிக்கப்படுவார்கள், ஆனால் இந்தியா நிறுத்தாது"
இப்போது ஒரு வாகனம் கிளம்பி உள்ளது, அதில் பிரேக் இல்லை. இடையில் யாரும் வரக்கூடாது. நீங்கள் விரும்பினால், எங்களுடன் வந்து உட்காருங்கள் அல்லது ஸ்டேஷனில் இருங்கள்.…
எங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நமது பன்முகத்தன்மையையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளோம். ஆனால் பன்முகத்தன்மை காரணமாக நாம் (ஒருவருக்கொருவர்) வேறுபட்டவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்றாக அணிவகுத்துச் சென்றால், நமது இலக்கை (20-25 ஆண்டுகளில்) அடைவோம். இவ்வாறு அந்நிகழ்வில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “