சில நாட்களுக்கு முன்பு இந்திய-நேபாள எல்லையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சுடப்பட்டர். நேபாள அரசிடம் இந்த விவகாரத்தை இந்தியா எழுப்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியா தனது இராஜதந்திர பிரிவின் மூலம் நேபாள தரப்பிடம் இது குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை, ரோந்து பணியில் ஈடுபட்ட நேபாள ஆயுத காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் , பீகார் மாநிலத்தின் சீதாமாரி எனும் எல்லையோர மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இந்தியா எல்லையில் உள்ள லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் மீது நேபாளாம் அதிகாரப்பூர்வமாக உரிமை கோரியதை தொடர்ந்து இரு நாட்டிற்கு இடையேயான உறவு சற்று பதட்டம் நிறைந்ததாக காணப்படுகிறது.
நேபாளத்தின் சர்லாஹி மாவடத்தின் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அரசியல் வட்டராங்கள் தெரிவித்தன. உயிரிழந்தவரின் பெயர் விகேஷ் யாதவ் என்று அடையாளம் காணப்பட்டது. உமேஷ் ராம், உதய் தாக்கூர் ஆகிய இருவர் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சீதாமாரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் உறவினர்களை காணுவதற்காக இந்தியா- நேபாள எல்லையைத் தாண்டும் போது நேபாள ஆயுத காவல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக, துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது முழுக்க முழுக்க உள்ளூர் மட்டத்திலான பிரச்சனை என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக இதை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் இந்திய தரப்பு தெரிவித்து வருகிறது. இது திட்டமிட்டு நடந்தப்பட்ட சம்பவமல்ல, இது போன்ற சம்பவங்கள் நடைபெறமால் இருக்கு இரு நாடுகளை சேர்ந்த உள்ளூர் காவல்துறை ஆலோசனையில் இறங்கியுள்ளது. டி.ஐ.ஜி நேபாள காவல்படை டி.ஐ.ஜி யுடன் தொடர்பில் உள்ளார் எல்லையில் எந்தவிதமான பதற்றமும் இல்லை ”என்று சசஸ்த்திர சீமை பலம் படையின் ஜெனரல் சந்திரா தெரிவித்தார்.