Amitabh Sinha
India reaches 1 million coronavirus cases but fewer deaths than US and Brazil : இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய எண்ணிக்கையை அடைந்துள்ளது இந்தியா. சில மாநிலங்களின் தரவு கிடைக்காத நிலையில் நேற்று இந்தியாவில் 10, 04,000 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தி நேரத்தில் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் கணக்கில் சில மாறுதல்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 லட்சமாக இருந்த கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தை எட்ட வெறும் 20 நாட்களே ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியாவிற்கு மேலே அமெரிக்காவும், பிரேசிலும் முறையே 3.4 மில்லியன் மற்றும் 1.92 மில்லியன் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. உலக அளவில் கொரோனாவிற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 13.37 மில்லியனாக உள்ளது. இதுவரையில் இந்நோய்க்கு 5,80,000 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரேசிலில் நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்படும் நபர்களின் அளவு இந்தியாவை காட்டிலும் குறைவாகவே உள்ளாது. இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் நபர்கள் என்ற வீதத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பிரேசிலில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் நோய் தொற்றுகளும், அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் நோய் தொற்றுகளும் உறுதி செய்யப்படுகிறது.
ஆனாலும் கூட இந்தியாவில் இந்நோய்க்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் 30ம் தேதி அன்று அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் என்ற நிலையை எட்டியது. அப்போதே அந்த நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி இருந்தது. பிரேசிலில் 10 லட்சம் நபர்களுக்கு நோய் உறுதி செய்யப்பட்ட போது ஜூன் 21ம் தேதி அன்று அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது. இந்தியாவில் இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 25 ஆயிரம் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“