India rejects China’s allegations : முன்னோக்கு கொள்கையை பின்பற்றுவதற்கான புது டெல்லியின் முடிவு மற்றும் உண்மையான எல்லைக்கோட்டை சட்ட விரோதமாக கடந்து சீன பகுதியில் இடம் ஆக்கிரமிப்பு செய்தது போன்றவையே தற்போதைய சூழலுக்கு காரணம் என்று சீனா பெய்ஜிங்கில் அடையாளப்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு இந்தியா வியாழக்கிழமை அன்று இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. மேலும் தற்போதைய சூழலுக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் செயல் மற்றும் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை குவித்தது தான் காரணம் என்று இந்தியா கூறியுள்ளது.
உண்மையற்ற, அடிப்படைத் தன்மையற்ற இந்த அறிக்கையை நாங்கள் சில நாட்களுக்கு முன்பே நிராகரித்து நம்முடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம் என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கைகளுக்கு இந்திய வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது, சீன எல்லைப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வீரர்களை குவித்தது மற்றும் அவர்களிம் ஆத்திரமூட்டும் செயல்கள் போன்றவை தான் உண்மையான எல்லைக் கோட்டில் அமைந்துள்ள கிழக்கு லடாக் பகுதிகளில் அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் சுழல் உருவானது என்று பாக்சி கூறினார். சீனா தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் இறக்கியது. இதற்கு பதில் நடவடிக்கை எடுக்கவே இந்தியா தரப்பில் இருந்து துருப்புகளை, இந்தியாவின் பாதுகாப்பு நலன் கருதி, எல்லைப் பகுதிகளில் இறக்கியது இந்திய ராணுவம் என்றும் பாக்சி தெரிவித்தார்.
இந்த மாத ஆரம்பத்தில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான வாங்க் யி-யை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கரும் இதையே வலியுறுத்தினார் என்று கூறிய பாக்சி, “கிழக்கு லடாக்கில் இருக்கும் உண்மையான எல்லைக் கோட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் முடிவு காண, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, சீனா தன் தரப்பில் தொடர்ந்து பணியாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் தெரிவித்தார்.
புதன் கிழமை அன்று சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஊவா சுன்யிங், "இந்திய தரப்பு நீண்டகாலமாக 'முன்னோக்கு கொள்கையை' பின்பற்றி வருகிறது மற்றும் சட்டவிரோதமாக LAC யை கடந்து சீனாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது, இது சீனா-இந்தியா எல்லை சூழ்நிலையில் பதற்றத்திற்கு மூல காரணம். சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடு மீதான போட்டி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் ஆயுத போட்டிகளை சீனா முழுமையாக எதிர்க்கிறது” என்று கூறினார்.
எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான உறுதிமொழியை சீனா ஏற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த வாரம், இந்தியா அனைத்து ஒப்பந்தங்களையும் மீறி கால்வான் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியது என்ற சீனாவின் புகாரை நிராகரித்தது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil