Shubhajit Roy
India rejects UN Secretary-General Antonio Guterres’s idea of mediation : கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மையப்புள்ளியாக இருக்கும் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்தியஸ்தராக இருந்து சமாதானம் செய்து வைக்க விரும்பினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப். ஆனால் இந்தியா, இது உள்நாட்டு விவகாரம் மூன்றாம் நபர்கள் தலையீடு வேண்டாம் என்று அறிவித்தது. அதே போன்று மீண்டும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க : காஷ்மீரின் சமரச தூதராக செயல்பட ட்ரெம்பை அழைத்தாரா மோடி?
பாகிஸ்தானில் ஐ.நா தலைவர்
நான்கு நாட்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் தலைவர் ஆன்டனியோ கட்டெரஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்தால் காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். இவரின் இந்த கருத்து வெளியான சில மணி நேரங்களிலேயே இந்திய தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே செயல்படும். பாகிஸ்தானில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த பிரச்சனைகளுக்கு தான் தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காண இருப்பதாக இருந்தாலும் அது இருநாட்டுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளப்படும். மூன்றாம் நபரின் தலையீடு இதில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மேலும் பேசிய ரவீஷ் குமார் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தான் சீரான, முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானை ஐ.நா தலைவர் வலியுறுத்த வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் விலைவாக அடிப்படை மனித உரிமைகள், குறிப்பாக வாழ்வதற்கான உரிமைகள், அனைத்தும் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.
இரு நாடுகள் ராணுவ ரீதியாகவும், வார்த்தைகள் ரீதியாகவும் எல்லைப் பகுதியில் இருக்கும் பதற்றத்தை குறைக்க வேண்டும். ”அதிக கட்டுப்பாட்டினை” இரண்டு நாடுகளும் கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் இஸ்லமாபாத்தில் அறிவித்தார் ஆன்டனியோ கட்டெரெஸ்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியிடன் ஆலோசனையில் ஈடுப்ட்ட கட்டெரெஸ் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ”ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின்படி தீர்வுகளுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரே கருவியாக அரசியல் முடிவுகள் மற்றும் அமைதி பேச்சுவார்த்தை உள்ளது” என்பதை அவர் மேற்கோள்காட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
இரு நாடுகளும் அதிக கட்டுப்பாட்டினை கடைபிடிகக் வேண்டும் என்பதை மேலும் மேலும் வலியுறுத்தினார். UNMOGIP எனப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. இராணுவ பார்வையாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு (UN Military Observers Group in India and Pakistan) அதிக அளவு சுதந்திரம் தர வேண்டும். இது ஏற்கனவே ஃப்ரீ அக்செஸூடன் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகிறது. அதே ஃப்ரீ அக்செஸை இந்தியாவும் தர வேண்டும் என்று கூறினார் அவர். ஆனால் இந்தியாவோ சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகு இந்த ராணுவ பார்வையாளர்கள் குழு அவசியமற்றது என்று கருதி வருகிறது.