70-வது இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி, அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் ராணுவ வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நாட்டு மக்களுக்காக தன்னுயிரை ஈந்த வீரர்களை நினைவுகூறும் வகையில் ராணுவ தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 70-வது ராணுவ தினமான இன்று, ராணுவ தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லன்பா, வான்படை தளபதி பி.எஸ்.தனோவா ஆகியோர், நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அமர் ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், ராணுவ வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், இந்திய குடிமக்கள் அனைவரும் ராணுவத்தினர் மீது நம்பிக்கையும், பெருமையும் கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார். பேரிடர்கள், விபத்துகள் ஏற்படும்போது ராணுவத்தினரின் மனிதம் தேசத்தை காப்பாற்றியதாக பிரதமர் தெரிவித்தார்.
அவர் தன்னுடைய மற்றொரு ட்விட்டர் பதிவில், “ராணுவம் நம் நாட்டை முன்னோக்கி செலுத்துகிறது. நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். அந்த வீரர்களை இந்தியா எப்போதும் மறக்காது”, என தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தன் ட்விட்டர் பக்கத்தில், “ராணுவ வீரர்களின் தியாகத்தையும், தைரியத்தையும் நினைவுகூர்கிறோம்.”, என தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோரின் பதிவு.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தன் ட்விட்டர் பக்கத்தில் வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் ட்விட்டர் பதிவு.
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் ட்விட்டர் பதிவு.