இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், கனடாவில் விசா சேவைகளை இந்தியா புதன்கிழமை (அக்.25) மீண்டும் தொடங்கியது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கனடாவில் இந்திய விசா சேவைகளை மத்திய அரசு நிறுத்திய நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது.
அதாவது, “நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் மாநாட்டு விசா ஆகிய பிரிவுகளுக்கான விசா சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன” என்று ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (அக்.22), வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கனடா பணியாளர்கள் தங்களது உள் விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்த கவலைகள் தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : India resumes visa services in Canada for select categories amid diplomatic row
இந்தியா-கனடா இடையேயான உறவு கடினமான கட்டத்தை கடந்து வருவதாகக் கூறிய ஜெய்சங்கர், கனடாவில் உள்ள தனது தூதர்களின் பாதுகாப்பில் முன்னேற்றம் கண்டால், கனடர்களுக்கான விசா சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்குவதை பார்க்க முடியும் என்றார்.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் கனடாவை ஆதரித்த ஒரு நாளுக்குப் பிறகு, இராஜதந்திர சமத்துவப் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை அவரது கருத்துக்கள் அடையாளம் காட்டின.
இதற்கிடையில், கனட அரசாங்கம் இந்தியாவில் இருந்து 41 தூதர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரு தூதரகங்களில் விசா மற்றும் தூதரக சேவைகளை நிறுத்தியது.
டெல்லியில் உள்ள கனட தூதரகத்தில் மட்டுமே சேவைகள் இப்போது கிடைக்கின்றன. இந்தியா 2020 இல் நிஜ்ஜாரை பயங்கரவாதியாக அறிவித்தது.
அவர் ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இதில் இந்தியா தலையீடு இருப்பதாக கனடா குற்றஞ்சாட்டியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“