பிடித்து வைத்த சீன வீரரை இந்திய ராணுவம் ஒப்படைத்தது

கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை, நேற்று இரவு சுஷுல்-மோல்டோ சந்திப்பு பகுதியில் சீனா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தன.

வாங் யா லாங் என அடையாளம் காணப்பட்ட அந்த வீரர்,  எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இந்திய ராணுவத்தால்  கைது செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல்கிழக்கு லடாக் அருகே சீனப்பகுதியில் சில கட்டுமானங்கள் நடைபெறுவதைக் காண முடிந்தது. மே மாத தொடக்கத்தில் இருந்து,  இந்தியா-  சீனத் துருப்புகள் இடையே பதற்றமான சூழல்  நிலவி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும், இந்தியா- சீனா ராணுவம் ஏராளமான படைகளையும், தளவாடங்களையும் குவித்து வருகின்றன.

 


முன்னதாக, இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது. மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய ராணுவத்தினர் மருத்துவ உதவி, ஆக்ஸிஜன் அளித்தனர். பின்னர் அவருக்கு உணவும், கடும் குளிரிலிருந்து காக்கும் உடையையும் இந்திய ராணுவத்தினர் வழங்கினர். இந்நிலையில், சீன ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை எனவும், அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால், தெரியப்படுத்தும்படியும் சீன ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே உள்ள ராணுவ நெறிமுறைகள் படி, அனைத்து நடைமுறைகளும் முடிந்தபின், அந்த சீன ராணுவ வீரர், சுசூல் – மோல்டோ சந்திப்பு பகுதியில் இந்திய ராணுவத்தினரால் ஒப்படைக்கப்படவுள்ளார்” என்று தெரிவித்தது.

 

 

சீனபாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்தியா உரிய முறையில் நடவடிக்கை எடுத்து, காணமால் போன வீரரை ஒப்படைக்கும் பணிகளை துரிதப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தது.

இரு நாடுகளும், எல்லை மோதல்களை தவிர்க்க ராஜியரீதியாகவும்ராணுவ வழியிலும் பேச்சுவாத்தைகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 7வது சந்திப்பிலும்
சாதகமான முடிவுகள் எட்டப்படாமல் உள்ளன. இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகளின் 8வது கூட்டம் இந்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், அதுகுறித்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India returns chinese soldier corporal wang ya long lac news

Next Story
ஹத்ராஸ் வழக்கு : ஃபாரன்சிக் அறிக்கையால் பயனில்லை என்ற மருத்துவர் பணி நீக்கம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com