டெல்லியில் நடைபெற உள்ள 19வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருவருக்கு இடையிலான இச்சந்திப்பு நடைபெற்றது.
Advertisment
இந்த சந்திப்பில் மொத்தம் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது இருநாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் உடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி மற்றும் புதின் சந்திப்பு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்தது.
இந்நிலையில் இன்று நடைப்பெற்ற சந்திப்பில், விண்வெளி துறை, அணு சக்தி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளிலும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதே சமயம் பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை வெளியான தகவலின் படி மொத்தமாக 20 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
குறிப்பாக 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு எஸ்-400 எனும் வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
Fulfilling the promise made by PM @narendramodi at Sochi!
முன்னதாக ரஷியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகளின் மீது பொருளாதார தடைவிதிக்கப்படும் என நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் புதின் - மோடி சந்திப்பு சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது.
எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தமும் பாதுகாப்பு துறைக்கு வலு சேர்க்கும் என்று மோடி தெரிவித்துள்ளார். அதே போல் நேற்று இரவு மோடி, ரஷ்ய பிரதமர் புதினுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார். அப்போது இருவரும் 2 மணி நேரம் பல்வேறு விஷயங்களை குறித்து பகிர்ந்து கொண்டனர்.