பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்கப் பயணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இந்தியா-அமெரிக்க போர் விமான எஞ்சின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா குறைந்தது 11 பெரிய உற்பத்தி தொழில்நுட்பங்களை பெற உள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.
தனது ஒன்பது ஆண்டுகால பதவியில் முதல்முறையாக, ஜூன் 21-24 வரை அரசுமுறை பயணமாக மோடி அமெரிக்கா செல்கிறார். இதில் அரசின் இரவு உணவு மற்றும் அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவதும் அடங்கும்.
மோடியின் அமெரிக்க பயணத்தின் போது முக்கியமான தொழில்நுட்பங்களை பெறுவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 2015-ல் 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய கட்டமைப்பின் அடிப்படையிலான இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்புடன் இது ஒத்துள்ளது. 2016-ல், பாதுகாப்பு உறவு ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டுறவாக நியமிக்கப்பட்டது இந்தியாவிற்கு வழங்கப்பட்ட முக்கிய அந்தஸ்தாக இருந்தது.
வட்டாரங்கள் கூறுகையில், “அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக்கின் ஜி.இ-எஃப்414 ஐ.என்.எஸ்6 (GE-F414 INS6) என்ஜின் இந்தியாவின் உள்நாட்டு தேஜாஸ் எம்.கே 2-க்கான ஒப்பந்தத்தில் கொள்கை ஒப்பந்தம் உள்ளது. லகு ரக போர் விமானம் Light Combat Aircraft (எல்.சி.ஏ) எம்கே1ஏ -ன் மேம்பட்ட பதிப்பு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) ஆல் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.” என்று தெரிவித்தனர்.
“இந்த எஞ்சினின் சுமார் 80 சதவிகித தொழில்நுட்பம் எச்.ஏ.எல்-க்கு வழங்கப்படும். மேலும், மீதமுள்ள 20 சதவிகித தொழில்நுட்பமும் வழங்கப்படும் என்பதும் மறுப்பதற்கு இல்லை” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“பெரும்பாலும், பிரதமரின் வருகையின் போது அவர்கள் தங்கள் உடன்பாட்டைக் குறிப்பிடுவார்கள்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஒப்பந்தத்திற்கு இரு கட்சி ஆதரவை சமிக்ஞை செய்த அமெரிக்க காங்கிரஸ் பின்னர் அதை அங்கீகரிக்க வேண்டும்.
ஜி.இ - எச்.ஏ.எல் (GE-HAL) போர் ஜெட் எஞ்சின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா குறைந்தது 11 பெரிய உற்பத்தி தொழில்நுட்பங்களை பெறும், அவை இந்தியாவில் உடனடியாக கிடைக்காது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்ப பரிமாற்ற திட்டத்தில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தொழில்நுட்பங்களில் அடங்கி இருப்பவை: சூடான முனைகளில் வெப்பத்தை தடை செய்யதல், உராய்வு மற்றும் தேய்வு ஏற்படாமல் இருக்க சிறப்பு பூச்சுகள்; ஒற்றை விசை கத்திகளுக்கு எந்திரம் மற்றும் பூச்சு; முனை வழிகாட்டி விசிறி அலகு, மற்றும் பிற சூடான இறுதி பாகங்களின் எந்திரம் மற்றும் பூச்சு; பிளிஸ்க் எந்திரம்; டர்பைனுக்கான தூள் உலோக டிஸ்க்குகளை எந்திரம் செய்தல்; மெல்லிய எந்திர டைட்டானியம் உறை; மின்விசிறி & ஆஃப்டர் பர்னருக்கான உராய்வு/பழுதுபார்க்கும் வெல்டிங்; பைபாஸ் குழாய்க்கான பி.எம்.சி; முனைக்கு சி.எம்.சி (செராமிக் மேட்ரிக்ஸ் கலவைகள்) எந்திரம் மற்றும் பூச்சு; லேசர் துளையிடும் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தொழில்நுட்பங்கள் அதிக உந்துதல் இயந்திரங்களை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும். மேலும் சில முக்கியமான தொழில்நுட்ப இடைவெளிகளை நிரப்பலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“இந்த ஒப்பந்தம் கையொப்பம் ஆன உடன் அவர்கள் எச்.ஏ.எல் உடன் சேர்ந்து செயல்படத் தொடங்குவார்கள், உற்பத்தி தொழில்நுட்பத்தை மாற்றுவதில் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள். ஆனால், ஜெட் என்ஜின்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“இதற்கிடையில் தேஜாஸ் எம்.கே-2 ஐயும் ஒரே நேரத்தில் தயாரிக்க வேண்டும். அதற்கும் இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகள் ஆகும். எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த செயல்முறை நடக்கும் என்று நம்பலாம். என்ஜின்கள் தயாரிப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்கும்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
வட்டாரங்கள் கூறியபடி, “அமெரிக்கா இத்தகைய தொழில்நுட்பத்தை வேறொரு நாட்டிற்கு தருவது இதுவே முதல் முறை. வேறு எந்த நாட்டுக்கும் இதுபோன்ற மிக உயர்ந்த சிக்கலான தொழில்நுட்பத்தை வழங்கவில்லை அல்லது தொழில்நுட்பத்தை மாற்ற தயாராக இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தொழில்நுட்பத்தை மாற்றுவதாகவும், அதை எப்படி செய்வது என்று எங்களிடம் கூறுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வேகம் அடைந்துள்ளது. ராணுவங்களுக்கு இடையே மேம்பட்ட தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சட்ட கட்டமைப்பை வழங்க பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில், லாஜிஸ்டிக்ஸ் பரிமாற்ற ஒப்பந்தம் (2016); தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (2018); தொழில்துறை பாதுகாப்பு ஒப்பந்தம் (2019); மற்றும் அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (2020) ஆகியவை அடங்கும்.
பாதுகாப்பு புதுமையாக்கல் ஒத்துழைப்பு தொடர்பாக, இந்திய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு புத்தாக்கப் பிரிவு (DIU), பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்புகள் (iDEX) ஆகியவற்றுக்கு இடையே 2018-ல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த மாதம், இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு திட்ட வரைபடம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே ஆஸ்டின் வருகையின் போது முடிவுக்கு வந்தது, இது பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் இணை உற்பத்தியையும் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.