Advertisment

ஜூலையில் சந்திராயன் 2... இஸ்ரோவின் புதிய அறிவிப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayan-2, Chandrayaan 2, Chandrayaan 2 news, Chandrayaan 2 moves higher orbit today

Chandrayan-2

Chandrayan-2 : நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் செயற்கைக்கோளான சந்திராயன் 2 ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Advertisment

இந்தியா சார்பில் முதன்முதலாக நிலவைப்பற்றி ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் சந்திராயன் 1 ஆகும். கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் செலவில் 2008 ஆம் ஆண்டும் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. மிகக்குறைந்த செலவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையை சந்திராயன் 1 இந்தியாவிற்குப் பெற்று தந்தது.

இதையடுத்து நிலவில் இறங்கி ஆராய்ச்சிகள் செய்யும் சந்திராயன் 2 ராக்கெட் தயாரிப்புப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நீண்ட காலமாக ஆராய்சி செய்து வந்தது.

இந்நிலையில், சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் தேதி மற்றும் முழு விபரத்தை இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் ‘சந்திரயான் - 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று தொகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டன. ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்பட்டு செப்டம்பர் 6ஆம் தேதி நிலவைச் சென்றடையும்’ என தெரிவித்துள்ளது.

May 2019

ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் 2 செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிரங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். அதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment