/tamil-ie/media/media_files/uploads/2022/08/mea-1-1.jpg)
ஜம்மு-காஷ்மீர் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா நேற்று (ஆகஸ்ட் 5) கண்டனம் தெரிவித்தது. மேலும் இது மதவெறியை வெளிப்படுத்துகிறது என்றும் இந்தியா சாடியது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் மூன்றாண்டுகள் ஆகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு,
ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்தநிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஜம்மு-காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதில், "ஐநா தீர்மானங்களின்படி பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கமாறு சர்வதேச சமூகத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது".
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கண்டனம் தெரிவித்துள்ளார். "இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கை மதவெறியை வெளிப்படுத்துகிறது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
மேலும், "நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களின் விளைவாக, ஜம்மு-காஷ்மீர் இன்று சமூக-பொருளாதார வளர்ச்சி கண்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
370வது சட்டப்பிரிவு ரத்து செய்ததன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங்யிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, "காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்" என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.