இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல் தொடங்கியது முதல் இதுவரை 2000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பலர் பணயக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள் என பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவிடம் கூறினார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (செவ்வாய்கிழமை) முதல் முறையாக தொலைபேசியில் அழைத்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், "இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறார்கள்" என்று கூறினார்.
நெதன்யாகுவின் அழைப்புக்கு மோடி நன்றி தெரிவித்து இஸ்ரேலின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மோடி தனது X பக்கத்தில், "இந்தியா அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது" என்று பதிவிட்டார்.
தொடர்ந்து, “இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணையாக இருக்கிறோம்” என்று மோடி கூறினார்.
பிரதமரின் கருத்துக்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலை முழுமையாக ஆதரிப்பதாகவும், ஒரு வகையில், தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துவதில் அதன் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும் கருதப்படுகிறது. இதுவரை வெளியான ரீட்அவுட் அல்லது ட்வீட்களில் பாலஸ்தீனிய காரணம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/netanyahu-calls-modi-who-tells-him-india-with-israel-in-this-difficult-hour-8977168/
இந்தியா-இஸ்ரேல் உறவு கடந்த பத்தாண்டுகளில் ஒரு வலுவான கட்டமைப்பில் மலர்ந்துள்ளது, மேலும் மோடி மற்றும் நெதன்யாகு இடையேயான தனிப்பட்ட இருதரப்பு உறவுகளும் நன்றாக உள்ளன, இந்தியாவின் நம்பகமான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பங்காளிகளில் ஒன்றாக இஸ்ரேல் இருந்து வருகிறது.
நெதன்யாகுவிடம் இருந்து மோடிக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு வந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களால் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு பிரச்சினையை பிரதமர் எடுத்துரைத்தார். இதற்கு பிரதமர் நெதன்யாகு முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை உறுதியளித்தார். இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் ட்வீட்கள் மற்றும் பிரதமர் அலுவலக அறிக்கைகள் இரு நாட்டின் நெருங்கிய உறவு மற்றும் இஸ்ரேலை ஒரு முக்கிய உறுப்பு நாடாக இந்தியா பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“