Shubhajit Roy
India strikes terror, deep in Pakistan : ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கூட முடிவடையாத நிலையில், இந்தியா 1971ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத முகாம்களை, கைபர் பக்துன்க்வா என்ற மாகாணத்தில் அமைந்திருக்கும் பாலகோட் என்ற பகுதியில் வெடிகுண்டுகள் மூலம் தாக்கி அழித்தது. எண்ணற்ற அளவிலான தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் இதில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன ?
உரி தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானிற்கு தந்திருக்கும் சரியான எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தங்கள் மண்ணில் தீவிரவாத நடவடிக்கைகளை முறையாக கட்டுப்படுத்தாதன் விளைவாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே மிகவும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச கூட்டமைப்பின் மூலமாக, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் முனைப்பில் இந்தியா ஈடுபட்டுள்ளது. லைன் ஆஃப் கண்ட்ரோலுக்கு 80 கி.மீ அப்பால் இருக்கும் ராணுவ-தளவாடங்கள் இல்லாத, தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வந்த பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பானது இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டதால், இந்த தாக்குதல் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது என்று ஃபாரீன் செக்கரட்டரி விஜய் கோகலே அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பாகிஸ்தானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் காஃபூர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட ஃபாரீன் செக்கரட்டரி விஜய் கோகலே இந்தியாவின் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டதால், பதில் தாக்குதல் மிகவும் அவசியமான ஒன்றாக அமைந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் தான் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வந்தது, மௌலானா யூசஃப் அசார் எனப்படும் உஸ்தாத் கௌரி. இவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் ஆவார்.
இந்த தாக்குதல் மூலம் மக்களுக்கு எந்த விதமான சேதாரமும் ஏற்படக்கூடாது என்பதில் கவனத்துடன் இந்திய விமானப்படை செயல்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கையில் பாலகோட் பகுதியைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பின்னர் தான், இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியின் பலம் வாய்ந்த மாகாணமான கைபர் பக்துன்க்வா என்று அறிவிக்கப்பட்டது. இங்கு தான் அல்-கொய்தா அமைப்பின் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையை சமர்பிக்கும் போது, புல்வாமா தாக்குதல் குறித்தும், அதில் ஜெய்ஷ் அமைப்பின் செயல்பாட்டினால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் நினைவு கூறினார். இந்த ஜெய்ஷ் - இ -முகமது அமைப்பு இருபது வருடங்களாக பாகிஸ்தானில் இருக்கும் பஹவல்பூர் என்ற இடத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. 2001, டிசம்பர் பாராளுமன்ற தாக்குதலுக்கும், பதான்கோட் 2016 தாக்குதலுக்கும் இந்த அமைப்பே பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.