Advertisment

இலங்கை மக்களுக்கு மட்டுமே ஆதரவு… ராஜபக்ச விவகாரத்தில் மவுனம் கலைத்த இந்தியா

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் ராஜபக்ச அல்லது இலங்கை அரசின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை

author-image
WebDesk
New Update
இலங்கை மக்களுக்கு மட்டுமே ஆதரவு… ராஜபக்ச விவகாரத்தில் மவுனம் கலைத்த இந்தியா

இந்தியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ராஜபக்ச குடும்பம் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தில் இருந்து விலகியிருக்கும் நிலைப்பாட்டை காண முடிந்தது. அதில், இலங்கை மக்களுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என உறுதியளித்திருந்தது.

Advertisment

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து, மத்திய அரசு முதல்முறையாக சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஜனநாயக முறைப்படி இலங்கை மக்கள் எடுக்கும் முடிவுகளை இந்தியா ஆதரித்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் ராஜபக்சேக்கள் அல்லது இலங்கை அரசை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை

இதில், "ஜனநாயக முறைப்படி" என்பது அமைதியான போராட்டங்கள், தேர்தல்கள், எதிர்ப்பாளர்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறை, அதிகாரத்தை தக்கவைக்க ராணுவ தலையீடு அல்லது அவசரநிலை பிரகடனம் போன்ற ஜனநாயக விரோத வழிமுறைகளையும் பயன்படுத்துவதில் அதிருப்தி ஆகியவை அடங்கும்.

இதற்கிடையில், மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பரவும் செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், மறுப்பு தெரிவித்துள்ளது.

அதில், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவது தெரியவந்தது. இவை போலியானது. அப்பட்டமான பொய்யான அறிக்கை. எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை தூதரகம் கடுமையாக மறுக்கின்றது என குறிப்பிட்டிருந்தனர்.

publive-image

டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், அண்டை நாடான ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ரீதியிலான மீட்டெடுப்பிற்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது.

இலங்கையின் தற்போதைய சிக்கலை சமாளிக்க, 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது. கூடுதலாக, உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைப் போக்கவும் உதவி செய்யப்பட்டது. ஜனநாயக முறைப்படி இலங்கை மக்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என்றார்.

இந்திய தூதரகம் மே 3 அன்று வெளியிட்ட அறிக்கையை பார்க்கையில், இந்தியாவின் நிலைப்பாடு மாறியுள்ளது.

அப்போது, 2022 ஆம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார உதவி, அதன் அரசாங்கம் மற்றும் மக்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதில் பங்கு வகிக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையில், அரசை குறிப்பிடாமல் இலங்கை மக்களை மட்டுமே குறிப்பிட்டு வெளியாகியுள்ளது.

மேலும், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான 1 பில்லியன் டாலர் கடன் வசதி ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment