Advertisment

கொரோனா பரிசோதனையில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு என்ன?

கொரோனா பரிசோதனையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாள் போராடிய தனியார் ஆய்வகங்களின்  தினசரி பங்களிப்பு 20% க்கும் குறைவாகவே உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா பரிசோதனையில் தனியார் ஆய்வகங்களின் பங்களிப்பு என்ன?

கொரோனா மருத்துவ பரிசோதனையை கடந்த மாதங்களில்  மூன்று மடங்காக உயர்த்திய நிலையில், வரும் காலங்களில் நாளொன்றுக்கு 2 லட்சமாக உயர்த்த இந்தியா தயாராகி வருகிறது

Advertisment

தற்போது, கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளொன்றுக்கு 1 லட்சத்தைத் தாண்டிய நிலையில், கொரோனா பரிசோதனையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாள் போராடிய தனியார் ஆய்வகங்களின்  தினசரி பங்களிப்பு 20% க்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், 30%  கொரோனா பரிசோதனை ஆய்வக உள்கட்டமைப்பு தனியார் துறையிடம் தான் உள்ளது.

ஏப்ரல் 16 முதல் மே 23 வரையிலான  காலகட்டத்தில் அரசு ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை விகிதம் 270 சதவீதமாக அதிகரித்தது (அதாவது, 23,932 -லிருந்து 88,947-க ). தனியார் ஆய்வகங்களுக்கான பரிசோதனை எண்ணிக்கை விகிதம் வெறும் நான்கு மடங்காக உயர்ந்தது   (4408- லிருந்து 21450-க )

178 தனியார் ஆய்வகங்களிடம் 29 சதவீத கொரோனா பரிசோதனை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.தற்போது, 431 அரசு ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடைபெற்றுவருகிறது.

"இந்தியாவில் தற்போது தினசரி 1.1 லட்சம் பேருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மேலும், ஒரு நாளைக்கு சுமார் 1.4 லட்சம் மாதிரிகளை சோதிக்கும் திறன் தற்போது இந்தியாவிடம் உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்துடன் (என்.டி.இ.பி.) இனைந்து  COVID-19 சோதனைக்கு TrueNAT இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன. அதிக ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த மாநிலத்திலும் கொரோனா பரிசோதனை தேக்கமடையவில்லை. உத்திர பிரேதேசம், பீகார், மேற்கு வங்காளம் போன்ற பிற மாநிலங்களில் கூடுதல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன”என்று மத்திய அமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர் பொது இயக்குனர், சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளர் டாக்டர் பால்ராம் பார்கவா ஆகியோர் கொரோனா தொற்று இலவசமாக பரிசோதிக்க வேண்டும்  என்ற வேண்டுகோள் விடுத்த நிலையில், தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்தது. கொரோனா தொற்று பரிசோதனைக்கு கட்டணம்  வசூலிக்கக்கூடாது என்ற அதன்பின் வந்த  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தனியார் ஆய்வங்களை நிலைகுலைய செய்தது. இறுதியில், கொரோனா பரிசோதனைக்கு  தனியார் ஆய்வகங்கள் கட்டணம் வசூலிக்கத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவு விசயத்தை சுமுகமாக மாற்றியது.

 

தனியார் ஆய்வகத்தின் பங்களிப்பு ஏன் குறைவாக உள்ளது என்று, Dr Dang’s ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் டாங் கூறுகையில் “ சிறப்பு மற்றும் மிகவும் விலையுயர்ந்த உபகரணங்கள், பயிற்சி பெற்ற ஊழியர்கள், மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தனியார் ஆய்வகங்கள்  வரம்புகளை கொண்டுள்ளன. தனியார் மற்றும் அரசு ஆய்வகங்களை ஒப்பிடுவது ஆப்பிள் பழத்தோடு, ஆரஞ்சு பழத்தை ஒப்பிடுவதற்கு சமமாகும். வணிகத்தைத் தக்கவைக்க, வழக்கமான ஆய்வகப் பணிகள் தொடர்ந்து நடை பெற வேண்டும். ஆனால்,கொரோனா காலத்தில் இது வழக்கத்தை விட மிகக் குறைவாக உள்ளது (சுமார் 18-20% மட்டுமே). மிக உயர்ந்த நோய் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை நாங்கள் கடைப்பிடித்தாலும், கொரோனா பரிசோதனை மையம் குறித்து மக்களிடையே ஒரு பயஉணர்வு இருக்கத்தான் செய்கிறது. எனவே, ஏசி போக்குவரத்து வாகனங்கள், பாதுகாப்பு கவசம் ஆகியவற்றில் அதிக முதலீடும்  தேவைப்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதுவரை 57 ஆயிரத்து 720 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3280 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. குணமடைவோர் மொத்த சதவிகிதம் 41.57 சதவீதம். இதுவரை இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் 1,38,845 பேர். மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருப்பவர்கள் 77103 பேர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment