ஆங்கிலத்தில் படிக்க...
இந்தியாவில் உள்ள 41 தூதர்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் திரும்ப பெற வேண்டும் என்று இந்தியா கனடாவிடம் கூறியுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி என்று கூறப்படும் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரும் கனேடிய குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கூறியதை தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்குமான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது,
இதனிடையே கனடா பிரதமரின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய அரசு, இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை வெளியீடுமாறு கனடா அரசிடம் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து கனடாவில் இருந்த இந்திய தூரதர்கள் வெளியேறுமாறு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் இது குறித்து விவாதங்களை தொடர்ந்து வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு இந்தியாவில் விசா வழங்கப்படமாட்டாது என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனிடையே அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தியா கனடாவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கனடா தூதர்கள் 62 பேர் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை 41-ஆக குறைக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கான கோரிக்கைகளுக்கு இந்திய மற்றும் கனேடிய வெளியுறவு அமைச்சகங்கள் இதுவரை பதிலளிக்கவில்லை. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறுகையில், கனடாவில் இந்திய தூதர்களுக்கு எதிராக "வன்முறையின் சூழல்" மற்றும் "மிரட்டல் சூழ்நிலை" இருந்தது, அங்கு சீக்கிய பிரிவினைவாத குழுக்களின் பிரசன்னம் புதுதில்லியை விரக்தியடையச் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“