உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்பு உள்ளதால், கிய்வ் இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர், இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. அங்கு தங்குயிருப்பது கட்டாயமில்லை என கருதும் நபர்கள் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டுமென, இந்த வாரத்தில் வந்த இரண்டாவது அறிவிப்பாகும். ஆனால், இந்த முறை உயர் நிலை பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை மேற்கோள் காட்டி, வலுவான அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தூதரக அறிக்கையில், " உக்ரைனில் தொடர்ந்து நிலவும் பதற்றங்கள், நிச்சயமற்ற நிலைகளை கருத்தில் கொண்டு, தங்குவதற்கு அவசியமில்லாத அனைத்து இந்திய நாட்டவர்களும், அனைத்து இந்திய மாணவர்களும் உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் - இந்தியா இடையில் குறிப்பிட்ட நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சிறப்பு விமானத்திற்கான அப்டேட் குறித்து தெரிந்துகொள்ள மாணவர் ஒப்பந்ததாரர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், தூதரக பேஸ்புக், இணையதளம் மற்றும் ட்விட்டரை பக்கங்களை செக் செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிகளின் உறவினர்கள் இந்தியாவுக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பிப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்ட வெளியுறவு துறை அறிவிவிப்பில், "இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், நிச்சயமற்ற நிலைமை காரணமாக தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும். அந்த நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
உக்ரைனில் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர் மருத்துவ படிப்பிறக்காக அங்கு சென்றுள்ளனர்.
கெய்வ் விமான நிலையம் இன்னும் செயல்படுவதால், வழக்கமான வணிக விமானங்கள் உக்ரைனில் இருந்து இயக்கப்படுவதால், இந்திய குடிமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா மூலம் சிறப்பு விமானங்களை இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil