“பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றிணைந்து செல்ல முடியாது” என்று கூறப்பட்ட நிலையில், இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே உரசல் நிலவி வந்தது.இந்த நிலையில், இந்தியா இந்த ஆண்டு தலைநகர் புது டெல்லியில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புதுடெல்லி அழைக்கும் என்று வியாழக்கிழமை கூறியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் எஸ்சிஓ தலைவர்கள் கூட்டத்திற்கு இம்ரான் கான் அழைக்கப்படுவாரா என்று கேட்டபோது, வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், ரவீஷ் குமார் “அமைப்பில் உள்ள அனைத்து 8 நாடுகளும் 4 பார்வையாளர்களும் அழைக்கப்படுவார்கள்” என்று கூறினார்.
இஸ்லாமாபாத்தின் அனைத்து சூழ்நிலயிலும் கூட்டாளியாக உள்ள சீனா ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (யு.என்.எஸ்.சி) கூட்டத்தில் எழுப்பிய ஒரு நாளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானில் கடுமையான தாக்குதலை நடத்தியது.
“யு.என்.எஸ்.சி உறுப்பினராக உள்ள சீனா மூலம் பாகிஸ்தானால் அந்த மேடையை தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு யு.என்.எஸ்.சி சரியான மன்றம் அல்ல. அது இருதரப்பு ரீதியாக விவாதிக்கப்பட வேண்டும் என்று யு.என்.எஸ்.சியின் பெரும்பான்மையானவர்கள் கருதினர்.” என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்ப்பதன் மூலம் இத்தகைய உலகளாவிய சங்கடங்களைத் தவிர்ப்பதற்கு பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம்கூறியது.
அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது, ஆகஸ்ட் மாதத்திலிருந்து சீனாவின் ஐ.நா.வில் இந்த பிரச்னையை எழுப்பும் நடவடிக்கை என்பது மூன்றாவது முறையாக மேற்கொண்ட முயற்சியாகும்.
“முறைசாரா மூடிய கதவு கூட்டம் எந்த முடிவும் இல்லாமல் முடிந்தது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கும் ஆபத்தான சூழ்நிலையை முன்வைப்பதற்கும் பாகிஸ்தானின் அவநம்பிக்கையான நடவடிக்கைகள் எந்த நம்பகத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை” என்று ரவிஷ் குமார் கூறினார்.
மேலும், ரவிஷ் குமார் கூறுகையில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏதேனும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இருந்தால், அது இருதரப்பு ரீதியாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற செய்தி பாகிஸ்தானுக்கு சத்தமாகவும் தெளிவாகவும் சென்றுவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
இந்த விவகாரத்தில், சீனாவின் தலையீடு குறித்து பேசிய ரவிஷ் குமார், “எங்கள் பார்வையில், சீனா இந்த உலகளாவிய ஒருமித்த கருத்தை தீவிரமாக பிரதிபலிக்க வேண்டும். சரியான படிப்பினைகளை வரைய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.