நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் தி.மு.க கூட்டணி மாஸ் காட்டும் எனத் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில், மற்ற கட்சிகள் வாக்கு சதவீதத்தில் 2-வது இடத்தைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், தேர்தல் அறிவிப்புக்கு முன், வாக்காள்ர்களின் மனநிலை யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்ற கருத்துக்கணிப்புகளும் நடந்து வருகிறது.
அந்த வகையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என்று சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 47% வாக்குகளை பெறும் என சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
இதே தி.மு.க தலைமையிலான கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 53% பெற்றிருந்தது என்றும் ஆனால், இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 6% குறைந்து 47% வாக்குகளைப் பெறும் என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க, பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க 12% வாக்குகளைப் பெற்றது என்றும் இந்த 2024 தேர்தலில், 3% வாக்குகள் அதிகரித்து பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 15% வாக்குகள் பெறும் என்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று இந்தியா டுடேன் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி மாஸ் காட்டும் என தெரிகிறது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணி கட்சிகள் 47% வாக்குகளும், பா.ஜ.க 15% வாக்குகளும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி அல்லாத மற்றக் கட்சிகள், தமிழ்நாட்டில், 38% வாக்குகள் பெறும் என்று சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி அல்லாத மற்றக் கட்சிகள் என்றால், அதில் அ.தி.மு.க, தே.மு.தி.க, அ.ம.மு.க, நா.த.க உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகளும் அடங்கும். எப்படியானாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி மாஸ் காட்டும் என்று தெரிகிறது.
மேலும், தேசிய அளவில், காங்கிரஸ் 71 இடங்களைப் பெறும் என்றும் பா.ஜ.க 304 இடங்களைப் பெறும் என்றும் சி வோட்டர்ஸ் இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“