திங்களன்று காஷ்மீர் மற்றும் மணிப்பூர் தொடர்பான ஐ.நா மனித உரிமைத் தலைவரின் கருத்துகளை இந்தியா கடுமையாக சாடியது.
"அடிப்படை ஆதாரமற்றது" என்று குறிப்பிட்டு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவாவில் உள்ள மற்ற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் பிரதிநிதி அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Unfounded, baseless’: India slams UN rights chief’s remarks on Kashmir, Manipur
மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் வோல்கர் டர்க், ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 58-வது அமர்வில், மணிப்பூர் மற்றும் காஷ்மீர் நிலைமையைப் குறித்து இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டதை அடுத்து இந்தியாவிடம் இருந்து வலுவான எதிர்வினை வந்தது.
துடிப்பான, பன்மைத்துவ சமூகம் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை வலியுறுத்திய பாக்சி, உண்மைத் தன்மை குறித்து உணராமல் இவ்வாறு பேசியிருப்பதாக தெரிவித்தார்.
"இந்தியாவைப் பற்றியும், நமது நாகரீக நெறிமுறைகளான பன்முகத்தன்மை மற்றும் திறந்த தன்மையைப் பற்றியும் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் வலியுறுத்துவோம்" என பாக்சி தெரிவித்தார்.
உலகளாவிய அளவில் உண்மையை அறிந்து கொள்ளாமல் இவ்வாறு பொதுப்படையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைத் தலைவர் டர்க், மணிப்பூரில், உரையாடல், அமைதியைக் கட்டியெழுப்புதல், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறை மற்றும் இடப்பெயர்ச்சியைத் தணிக்க "முடுக்கப்பட்ட" முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். "மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் பயன்படுத்தப்படுவதால் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் காஷ்மீர் உட்பட குடிமக்கள் இடம் குறைந்து வருகிறது" என்று தெரிவித்திருந்தார்.
"இந்தியாவின் ஜனநாயக அமைப்பு அதன் பன்முகத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், மிகப்பெரிய பலமாகவும் உள்ளன. ஜனநாயகத்திற்கு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பங்கேற்பு மற்றும் உள்ளடக்கத்தை தொடர்ந்து வளர்ப்பது தேவைப்படுகிறது" என்று டர்க் கூறினார்.
உக்ரைன், காசா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா வரையிலான மோதல்கள் மற்றும் சூழ்நிலைகளை டர்க் குறிப்பிடுகையில், பாகிஸ்தானைப் பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.