Advertisment

சீனாவுக்கு போட்டியாக இந்தியா: சொந்தமாக 'எல்.எல்.எம்' ஏஐ அடித்தள மாதிரியை அமைக்க திட்டம்!

இந்தியா ஏஐ (IndiaAI) மிஷனின் கீழ், முதல் சுற்று நிதியுதவிக்காக 18 பயன்பாட்டு நிலை AI தீர்வுகளையும் அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
IT Minister Ashwini Vaishnaw

உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பல நாடுங்கள் ஏ.ஐ. டெக்னாலஜியை கண்டறிந்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் சீனா, செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகம் குறைந்த விலை அடிப்படை மாதிரியான டீப்சீக் (DeepSeek) ஐ அறிமுகப்படுத்தியது. அற்த அறிமுகம் வந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் ரூ.10,370 கோடி இந்தியா ஏ.ஐ (IndiaAI) மிஷனின் ஒரு பகுதியாக அதன் சொந்த உள்நாட்டு பெரிய மொழி மாதிரியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisment

Read In English: India braces up for AI challenge, plans own LLM foundational model to rival ChatGPT, DeepSeek R1

இந்திய அரசாங்கம் இதற்காக, 18,693 கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள் அல்லது ஜி.பி.யூ(GPU)-களை வழங்கும் 10 நிறுவனங்களையும் தேர்ந்தெடுத்துள்ளது. அடிப்படை மாதிரியை உருவாக்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய இயந்திர கற்றல் கருவிகளை உருவாக்கத் தேவையான உயர்நிலை சில்லுகள். நிறுவனங்களில் ஹிரானந்தனி குழுமத்தின் ஆதரவு பெற்ற யோட்டா (Yotta),ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ( Jio Platforms), டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications), இ2இ நெட்வொர்க்ஸ் (E2E Networks), சி.எம்.எஸ் கம்யூட்டர்ஸ் (CMS Computers),சென்ட்ரல் டேட்டா சென்டர்ஸ் (Ctrls Datacenters), லோகஸ் என்ட்ர்பிரைசஸ் சொல்யூஷன் (Locuz Enterprise Solutions), செக்ஸ்ட் ஜென் டேட்டா சென்டர் (NxtGen Datacenter), ஓரியண்ட் டெக்னாலஜி (Orient Technologies) மற்றும் வென்சிகோ டெக்னாலஜிஸ் (Vensysco Technologies) ஆகியவை அடங்கும்.

இதில் மொத்த GPU-களில் கிட்டத்தட்ட பாதி Yotta-விலிருந்து மட்டுமே வரும், அவர்கள் 9,216 யூனிட்களை வழங்க உறுதியளித்துள்ளனர். இது குறித்து அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், கடந்த 1.5 ஆண்டுகளாக, எங்கள் குழுக்கள் ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றன. இன்று, எங்கள் சொந்த அடித்தள மாதிரியை உருவாக்குவதற்கான திட்டங்களை நாங்கள் கேட்டிருக்கிறோம். இந்த மாதிரி இந்திய சூழல், மொழிகள், கலாச்சாரம் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளும், சார்புகள் இல்லாதது.

Advertisment
Advertisement

மேலும், இந்த அடித்தள மாதிரியை உருவாக்குவதற்காக அரசாங்கம் குறைந்தது ஆறு டெவலப்பர்களுடன் தொடர்பில் உள்ளது, இது 4-8 மாதங்களுக்கு இடையில் எங்கும் ஆகலாம்" அடுத்த சில மாதங்களில் உலகத் தரம் வாய்ந்த அடித்தள மாதிரியை நாம் பெறலாம் இருப்பினும், இந்த மாதிரியை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதையும், அரசாங்கம் தற்போது தொடர்பில் உள்ள நிறுவனங்களையும் அவர் குறிப்பிடவில்லை. கம்ப்யூட் பவரை வாங்குவதற்கு உதவுவது குறித்து, எம்பேனல் செய்ய அங்கீகரிக்கப்பட்ட 18,693 ஜிபியுக்களில், சுமார் 10,000 ஜிபியுக்கள் இன்று நிறுவத் தயாராக உள்ளன என்றும வைஷ்ணவ் கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கணினி சக்தியை அணுகக்கூடிய ஒரு பொதுவான கணினி வசதியை அரசாங்கம் தொடங்கும். உயர்நிலை ஜிபியுக்களை அணுகுவதற்கான செலவு ஒரு மணி நேரத்திற்கு ரூ.150 ஆகவும், குறைந்த அளவிலான ஜிபியுக்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.115.85 ஆகவும் இருக்கும். இந்த சேவைகளுக்கான அணுகலை மேலும் எளிதாக்க, அரசாங்கம் இறுதி பயனர்களுக்கு மொத்த விலையில் 40 சதவீத மானியத்தை வழங்கும்.

“உலகளவில், ஜிபியு அணுகலுக்கு ஒரு மணி நேரத்திற்கு 2.5-3 டாலர் வரை செலவாகும். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1 டாலர் மானியத்திற்குப் பிறகு, நாங்கள் அதை கிடைக்கச் செய்கிறோம் இந்தியா ஏ.ஐ (IndiaAI) மிஷனின் கீழ், முதல் சுற்று நிதியுதவிக்காக அரசாங்கம் 18 பயன்பாட்டு-நிலை AI தீர்வுகளையும் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த பயன்பாடுகள் விவசாயம், கற்றல் குறைபாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதாக வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

India China AI
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment