Advertisment

அரசியலில் இளம் ஜோடிகளான மேயர், எம்எல்ஏ தம்பதி... இது கேரள லவ் ஸ்டோரி

பாலுச்சேரி எம்.எல்.ஏ. கே சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
அரசியலில் இளம் ஜோடிகளான மேயர், எம்எல்ஏ தம்பதி... இது கேரள லவ் ஸ்டோரி

டிசம்பர் 2020 இல், கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றார். அவர் இந்தியாவின் இளம் வயது மேயர் என அழைக்கப்பட்டு, அவரது புகழ் பரவியது. பின்னர், 5 மாதங்களுக்கு பிறகு, தற்போதைய கேரள சட்டசபையின் இளம் சட்டமன்ற உறுப்பினராக கே.எம்.சச்சின் தேவ் பதவி விகித்தார்.

Advertisment

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா மற்றும் சச்சின் தேவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா, "நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான அரசியல் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள். SFI இல் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றியுள்ளோம். நல்ல நண்பர்களாக இருந்தோம். தற்போது, திருமண செய்யலாம் என முடிவெடுத்து, பெற்றோருக்கு தெரிவித்தாம்.

இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பதால், வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த கட்சி மற்றும் எங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்தோம் என்றார். SFI என்பது CPI(M)ன் மாணவர் அமைப்பாகும்.

மேலும் பேசிய ஆர்யா, " திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையும், கட்சியினரிடையும் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஆர்யா, இடதுசாரிகள் குழந்தைகள் பிரிவான பால சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், SFI இன் மாநிலக் குழு உறுப்பினராகவும் உள்ளார். 21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் 100 வார்டுகளில் 52 வார்டுகளில் வெற்றி பெற்றது.

மறுபுறம், தேவ், SFI இன் மாநிலச் செயலாளராக உள்ளார். இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் சார்பில் பாலுச்சேரி (SC) தொகுதியில் போட்டியிட்டு 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டமும், கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சங்க தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment