2023-ம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்தியாவின் ராணுவ வலிமையைக் காட்சிப்படுத்துதல் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து பல கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி வகுப்பு நடைபெற்றது.
இந்திய விமானப்படை ரஃபேல் ஜெட் விமானங்கள், சுகோய் விமானங்கல், அப்பாச்சி விமானங்கள் மற்றும் ஜாகுவார் விமானங்கள் உள்ளிட்ட நவீன விமானங்கள் மற்றும் பழங்கால விமானங்கள் வானத்தில் பறந்து சாகசம் செய்து காட்சிப்படுத்தியது.
டெல்லியில் நடைபெற்ற 74வது இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்தியாவின் ராணுவ வலிமையையும் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து பல கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி வகுப்பு நடைபெற்றது.
விமானங்ள் வானத்தில் பறந்தபோது, மேகமூட்டமாக இருந்ததால் பார்வையாளர்கள் சரியாக பார்க்க முடியவில்லை என்றாலும், விமானங்கள் நடுவானத்தில் எப்படி பறக்கின்றன, எந்த வடிவில் பறக்கின்றன என்பதை இந்திய விமானப் படை கார்தவ்யா பாதை மைதானத்தில் பார்வையாளர்களுக்க்கு பெரிய திரையில் வீடியோ காட்சிகளாக ஒளிபரப்பியது.
- இந்திய விமானப் படையில் உள்ள முதன்மை போர் விமானங்களான சுகோய்-30 எம்கேஐ வானத்தி 3 விமானங்கள் திரிசூலம் வடிவில் பறந்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
- ஆழமாக ஊடுருவித் தாக்கும் ஜாகுவார் விமானங்கள் 6 விமானங்கள் அம்ரித் வடிவில் இணைந்து பறந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.
- இரண்டு சுகோய் 30 எம்கேஐ ஏர் போர் விமானங்களால் சூழப்பட்ட சி 17 ஹெவி-லிஃப்ட் டிரான்ஸ்போர்ட் விமானங்கள் செங்குத்தாக வானில் மேலே எழும்பி பீம் வடிவில் பறந்தது.
- நான்கு ரஃபேல் மல்டி-ரோல் போர் விமானங்கள் மற்றும் வான்வழி முன்னறிவிப்பு மற்றும் கட்டுப்பாடு உடன் நேத்ரா வடிவில் பறந்தது.
- சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானம் மத்தியில் இருக்க இருபுறமும் இரண்டு ரஃபேல் மல்டி-ரோல் போர் விமானங்கள் பறக்க வஜ்ராங் வடிவில் பறந்து சாகசம் செய்த காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”