/tamil-ie/media/media_files/uploads/2019/09/a16-2.jpg)
Indian Army Cheetah helicopter crashed in Bhutan both pilots lost their lives - இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பயிற்சி அளித்த இந்திய விமானி பரிதாப பலி
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில், அந்நாட்டின் விமானிக்கு பயிற்சி அளித்த போது விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியது.
பூடான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி, இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்றில், பூடான் ராணுவ விமானிக்கு, இந்திய ராணுவ விமானி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.
பயிற்சியின் போது இன்று(செப்.27) மதியம், மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முற்பட்ட போது, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில், பயிற்சி அளித்த இந்திய விமானியும், பயிற்சி பெற்ற பூடான் விமானியும் பலியாகினர்.
பொதுவாக, ராணுவ ஹெலிகாப்டரோ அல்லது விமானமோ விபத்தில் சிக்குவது போல் இருந்தால், விமானிகள் பாராசூட் மூலம் தப்பித்துவிடுவார்கள். விமானம் மட்டும் விபத்தில் சிக்கும். ஆனால், இங்கு இரு விமானிகளுமே பலியாகி இருப்பது ராணுவ அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து, இந்திய அதிகாரிகளும், பூடான் அதிகாரிகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏ.என்.ஐ. தகவலின்படி, பயிற்சி அளித்த இந்திய அதிகாரி லெப்டினன்ட் கலோனல் அந்தஸ்தில் இருப்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.