'நாட்டில் எமர்ஜென்சி என்பது பொய்யான தகவல்' - இந்திய ராணுவம் க்ளீயர் கட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Army dismisses rumours on likely declaration of Emergency in April

Indian Army dismisses rumours on likely declaration of Emergency in April

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படலாம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் தகவல்களை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Advertisment

கொரோனாவை முன்வைத்து ஏராளமான பொய் செய்திகள் வலம் வருகின்றன. அதன்படி, தற்போதைய லாக்டவுனை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமல்படுத்தப்படும் என்கிற தகவலும் ரவுண்டு கட்டி வருகிறது.

கொரோனா : எப்போதும் நம்மை காப்பது ராணுவம் தான்... இவர்களின் இந்த உதவி மிகப் பெரியது!

Advertisment
Advertisements

அதுவும் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின்னர் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்படும் என்றும், ராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற என்.சி.சி., என்.எஸ்.எஸ். பிரிவினரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அந்த சமூக வலைதள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதனை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ராணுவ தகவல் தொடர்பு கூடுதல் இயக்குநரகம் கூறுகையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது பொய்யான செய்தி என திட்டவட்டமாக கூறியுள்ளது.

30, 2020

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற ஹேஷ்டேகுகளை சிலர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகம் தனது ட்வீட்டில், "வதந்திகள் மற்றும் ஊடக செய்திகளில், லாக் டவுன் 21 நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை செயலாளர் இந்த அறிக்கைகளை மறுத்துள்ளார், மேலும் அவை ஆதாரமற்றவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: