/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-31T211730.248.jpg)
கிழக்கு லடாக்கில் முழு அளவிலான போரை நடத்த இந்திய இராணுவம் தயாராக உள்ளது என்று வடக்கத்திய படைப்பிரிவு தெரிவித்தது.
குளிர்காலத்தில் எந்தமாதிரியான நிலைமை மற்றும் சூழ்நிலை இருந்தாலும் கிழக்கு லடாக்கில் முழு அளவிலான ஆயத்த நிலையை மேற்கொண்டு இருப்பதாகவும், சீன ராணுவம் போருக்கான நெருக்கடியை உருவாக்கினால், அவர்கள் பயிற்சி பெற்ற, உளவியல் ரீதியாக சிறந்து விளங்கும் இந்திய துருப்புக்களை எதிர் கொள்வார்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மற்றும் உளவியல் ரீதியாக இந்திய துருப்புக்கள் களத்தை சந்திகின்றனர். பெரும்பாலும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த துருப்புகளை கொண்டிருக்கும் சீன ராணுவம், நெருக்கடியான போர் களங்களில் இன்னும் சோதிக்கப்படவில்லை.
இந்தியாவின் ராணுவ செயல்பாடு தளவாடங்கள் தயார் நிலையில் இல்லை என்றும், குளிர்காலத்தில் அதனால் திறம்பட போராட முடியாது என்றும் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இராணுவத்தின் வடக்கத்திய படைப்பிரிவு இந்த செய்திக் குறிப்பை வெளியிட்டது.
குளோபல் டைம்ஸின் செய்தி அறியாமைக்கு சிறந்த காரணம் என்று கூறலாம். குளிர்காலத்திலும், கிழக்கு லடாக் பகுதியில் இந்திய இராணுவம் தயார் நிலையில் உள்ளது. முழு அளவிலான போரை நடத்துவதற்கான பலத்தை வெளிப்படுத்தும் ,’’ என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தியா அமைதியை நேசிக்கும் நாடு. அண்டை நாடுகளுடன் எப்போதுமே ஒருங்கிணைந்தும், நட்புரீதியாகவும் நெருங்கிப் பணியாற்ற விரும்புகிறது. கருத்து வேறுபாடுகள் உரையாடல்கள் மூலம் தீர்க்கவே இந்தியா முனைகிறது. சீனாவுடனான எல்லை பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இராணுவ மட்டத்தில் நீண்டகால எல்லை மோதலை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது, ’’ என்றும் தெரிவித்தார் .
நவம்பர் மாதத்திற்குப் பிறகு, லடாக் பகுதியில் 40 அடி வரை பனிப்பொழிவு நிலவும். இதனால், அங்கு வெப்பநிலை மைனஸ் 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் இருப்பது வழக்கமான ஒரு நிகழ்வு. குளிர் காற்று துருப்புக்களுக்கு மேலும் ஒரு மோசமான சூழலை உருவாக்கும். பனி காரணமாக சாலைகளும் மூடப்பட்டிருக்கும் . எவ்வாறாயினும், இந்திய துருப்புகள் குளிர்கால எல்லை மோதலை சமாளிக்கும் மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர் ’என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உலகில் மிக உயர்ந்த சியாச்சின் பனிமலை போர்க்கள அனுபவத்தை இந்திய இராணுவம் கொண்டுள்ளது என்பதை சீனா ராணுவம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பொதுவாக, லடாக் பகுதியை அடைய சோஜிலா (ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை) மற்றும் ரோத்தங் கணவாய்க்கு கீழே அமைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதை (மணலி-லே) என இரண்டு வழிகள் இருந்தன. சமீபத்தில் இந்தியா தார்ச்சா - லே வரையிலான மூன்றாவது சாலையை அமைத்தது. ரோத்தங் பாதையில் நிறைவடைய இருக்கும் அடல் சுரங்கப்பாதை தளவாட திறன்களை பலப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
கூடுதலாக, இந்திய ராணுவம் ஏராளமான விமான தளங்களை கொண்டுள்ளது. அதன் உதவியுடன் இராணுவத்தை சிறப்பாக பராமரிக்க முடியும். நவம்பர் மாதத்திற்கு அப்பால் திறந்திருக்கும் வகையில் நவீன பனி அகற்றும் கருவிகளும் இந்த பாதைகளில் வைக்கப்பட்டுள்ளன, இதனால் துருப்புக்களின் தினசரி பராமரிப்புக்கு எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது, ’’ என்றார்.
செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், போரில் ஈடுபடமால் சண்டையில் வெற்றியடையும் சிந்தாந்தத்தை சீனா கொண்டுள்ளது. போருக்கான நெருக்கடியை உருவாக்கினால், சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் ஆயத்தமாக உள்ள, உளவியல் ரீதியாக பக்குவப்படுத்தப்பட்ட இந்திய துருப்புக்களை சந்திக்க நேரிடம்.
இத்தகைய கவலைகள் சீனத் துருப்புக்லைன் மனதில் ஊடுருவி வருகின்றது. அவை சீன ஊடகங்களிலும் காணப்படுகின்றன, ’’ என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.