ராணுவ படை வீரர்கள், அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் விருப்ப இன்டர்ஷிப் திட்டம் : பின்னணி இதுதானோ?

Indian army : இது சோதனைமுறையிலேயே தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும்பட்சத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் எ்னறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian army, indian army voluntary tour of duty, indian soldiers, patriotism, unemployment, indian army duty, indian army permanant jobs, , indian express
indian army, indian army voluntary tour of duty, indian soldiers, patriotism, unemployment, indian army duty, indian army permanant jobs, , indian express

இந்திய ராணுவத்தின் குறுகிய கால சேவையின் கீழ் இளைஞர்கள் 3 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பளிக்கும் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ராணுவத்தின் குறுகிய கால சேவையில் அதிகாரிகளாக சேருபவர்கள் 10 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை பணியில் நீடிக்கலாம். தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் நிரந்தர பணியிலும் சேர்க்கப்படுகின்றனர். ராணுவ வீரர்களைப் பொறுத்தவரை 19-20 வயதில் பணியில் சேருகின்றனர். அவர்கள் 17 ஆண்டுகள் வரை ராணுவத்தில் சேவையாற்றுகிறார்கள்.இந்நிலையில், ராணுவத்தின் குறுகிய கால சேவையின் கீழ் இளைஞர்கள் 3 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பளிக்கும் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல்கட்டமாக 100 அதிகாரிகள், 1,000 வீரர்களை தேர்வு செய்ய ராணுவ தலைமை திட்டமிட்டுள்ளது. முதல் ஓராண்டுஅவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகள் அவர்கள் ராணுவத்தில் சேவையாற்றுவார்கள்.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியபோது, “கடந்த 1999 கார்கில் போரின்போது 3 ஆண்டுகளுக்கு குறைவான பணி அனுபவம் உடைய ராணுவ அதிகாரிகள், வீரர்களே மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். பெரும்பாலான இளைஞர்கள் சில ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர். தேசப்பற்று மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ‘3 ஆண்டுபணி’ திட்டத்தை தயார் செய்துள்ளோம். தற்போது பின்பற்றப்படும் உடல்திறன், கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். அதில் எவ்வித சமரசமும் செய்யப்படாது. புதிய திட்டத்தில் ஓர் இளைஞர் 22 வயதில் ராணுவத்தில் இணைந்தால் 25 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார். புதிய ஆட்சேர்ப்பு திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது. விரைவில் அமலுக்கு வரலாம்” என்று தெரிவித்தன.

ராணுவத்தில் நிரந்தர பணிகளில் அமர்த்தப்படட்டுள்ள படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் இன்டர்ஷிப் என்ற பெயரில் தற்காலிக அனுபவம் பெற அவர்கள் அனுப்பபட உள்ள திட்டத்தின் மூலம், நாட்டில் வேலைவாய்ப்பின்மை இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.இருந்தபோதிலும், நாட்டின் மீதான தேசியவாதம் மற்றும் தேசபக்தி விவகாரத்தில் தொய்வு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ராணுவ செயதித்தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் தெரிவித்துள்ளதாவது, படைவீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டு கால இன்டர்ஷிப் வழங்கப்படுவது குறித்து தற்போது ஆலோசனையிலேயே உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த பல்வேறு துறையினரின் ஒப்புதல்கள் வேண்டுமென்பதால், இதனை செயல்படுத்த நீண்ட காலம் ஆகும். ராணுவத்தில் ஆட்களை எடுப்பதற்கான நடைமுறைகள், விதிகள் எதுவும் தளர்த்தப்படவில்லை. இந்த இன்டர்ஷிப் திட்டம் அவரவர்கள் விருப்பத்தின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். அனைவரும் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த திட்டம் குறித்த தேவையில்லாத பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை யாவும் உண்மையில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்களும் மற்றவர்களை போல சுகங்களை அனுபவிக்கும் பொருட்டே, இந்த திட்டம் வகுக்கப்பட்டு ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராணுவத்தின் குறுகிய கால சேவையில் ஓர் அதிகாரிக்கு சுமார் ரூ.6.8 கோடி வரை செலவாகிறது. 3 ஆண்டு பணி திட்டத்தில் ஓர் அதிகாரிக்கு ரூ.80 லட்சம் மட்டுமே செலவாகும். இதேபோல ஒரு ராணுவ வீரரின் 17 ஆண்டு கால சேவைக்கு ரூ.11.5 கோடி வரை செலவாகிறது. 3 ஆண்டு பணி திட்டத்தில் ரூ.80 லட்சம் வரை மட்டுமே செலவாகும்.

முன்னாள் ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்துகாக மத்திய பாதுகாப்பு பட்ஜெட்டில் 30 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. புதியஆட்சேர்ப்பு திட்டத்தை அமல்படுத்தினால் ராணுவத்தின் நிதிச் சுமை பெருமளவு குறையும். இந்த திட்டம் ராணுவம் மட்டுமன்றி கடற்படை, விமானப்படையிலும் அமல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறுகிய சேவை ஆணைய அதிகாரிகள் மீண்டும் தங்களது நிரந்தர பணிகளில் சேர அனுமதித்தால், அவர்களுடைய ஓய்வு ஊதிய பலன் உள்ளிட்டவைகளால் மேலும் செலவு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுவே, படைவீரர்கள் எனில், அவர்கள் வழக்கமாக 17 ஆண்டுகள் சேவையில் இருப்பர். இவர்களுக்காக, ராணுவம் தலா ரூ.11.5 கோடி வரை செலவழித்திருக்கும். இந்த 3 ஆண்டுகள் இன்டர்ஷிப் சேவையுடன் ஒப்பிடும்போது அதன் விகிதம் குறையும்.

இளைஞர்கள் உள்ளிட்ட படைவீரர்கள், தங்களது துறையில் சிறந்து விளங்க இத்தகைய பயிற்சிகள் துணையபுரியும். இந்த இன்டர்ஷிப் பயிற்சியா்ல, பயிற்சிபெற்ற, ஒழுக்கமான, மன உறுதி நிறைந்த படைவீரர்கள் ராணுவத்திலும், மற்ற பணியாளர்கள் அந்தந்த துறையிலும் கிடைக்கப்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சோதனைமுறையிலேயே தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும்பட்சத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் எ்னறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian army indian army voluntary tour of duty indian soldiers patriotism unemployment

Next Story
ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com