பாகிஸ்தான் ராணுவம் 5 முறை தாக்குதல்.. போஃபர்ஸ் பீரங்கி துப்பாக்கிகளால் பதிலடி கொடுத்த இந்தியா..

பாகிஸ்தானின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய துருப்புகள் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது பீரங்கித் தாக்குதல்களின் மூலம் கடுமையான பதிலடி கொடுக்க வழிவகுத்துள்ளன.

By: August 4, 2019, 12:45:22 PM

சுஷந்த் சிங், அடில் அகேர்

Indian Army retaliatory response to Pakistan’s BAT: காஷ்மீரில் நடந்து வரும் குழப்பங்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர்நிறுத்த விதிகளை மீறி துப்பாக்கிச் சூடு நடப்பது அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழுவின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய துருப்புகள் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது பீரங்கித் தாக்குதல்களின் மூலம் கடுமையான பதிலடி கொடுக்க வழிவகுத்துள்ளன.

கடந்த சில நாட்களில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தானின் எல்லைக்கோடு நடவடிக்கை குழு 5 முறை தாக்குதல் நடத்தியதாக ராணுவத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தி சண்டே எக்ஸ்பிரஸுக்கு தெரிவித்தன. இந்த எல்லைக்கோடு நடவடிக்கை குழுக்கள் மிகவும் உயர்ந்த தொழில்முறை பயிற்சிகளைப் பெற்ற (சிறப்பு பணிகள் குழு) கமாண்டோக்களைக் கொண்ட பாகிஸ்தான் ராணுவம் என்று” இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகள் மீது நடத்திய பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா தரப்பிலிருந்து அதற்கு பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பதில் தாக்குதலில், நீண்ட காலத்திற்குப் பிறகு, பிர் பஞ்சால் எல்லைகளுக்கு வடக்கே 155 மி.மீ போஃபர்ஸ் பீரங்கித் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் போஃபர்ஸ் துப்பாக்கிகள் பயன்படுத்துவது அரிது என்றாலும் பிர் பஞ்சால் தெற்கு பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இவ்வளவு பெரிய பதிலடி தாக்குதலுக்கு தயாராக இல்லாததால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பீரங்கித் துப்பாக்கிகள் பயன்படுத்துவது என்பது ஏப்ரல் மாதத்தில் இரண்டு ராணுவங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட முறைசாரா ஒப்பந்தத்தின் முறிவைக் குறிக்கிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த விதிகளை மீறும்போது துப்பாக்கிகளின் திறனை அதிகரிப்பது மேற்கொள்ளப்படவில்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த மீறல்கள் பெரும்பாலும் சிறிய ரக ஆயுத துப்பாக்கிச் சூடு என்ற அளவில் இருந்தன. ஜூன் மாதத்தில் நடந்த 181 போர் நிறுத்த விதி மீறல் துப்பாக்கிச் சூட்டில் 6 திறன் கொண்ட துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீரில் கெரான் பிரிவில் உள்ள முன்னணி ராணுவ நிலைகளில் ஒன்றின் மீது பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழு தாக்குதல் நடத்தியது குறித்து, சனிக்கிழமை ராணுவ வட்டாரம் கூறுகையில், பதில் தாக்குதலில் 5 முதல் 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன் விளைவாக அதன் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தது என்று தெரிவித்தன.

ஸ்ரீநகரில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 36 மணி நேரத்தில், பாகிஸ்தானால் பள்ளத்தாக்கில் அமைதியைக் குலைப்பதற்கும் அமர்நாத் யாத்திரையை குறிவைத்தும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் குப்வாராவில் கெரான் பிரிவில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழு தாக்குதல் நடத்தியதாகவும் இப்பகுதியில் தாக்குதல் நடவடிக்கை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய கர்னல் ராஜேஷ் கலியா, “இப்பகுதியில் ஷெல் தாக்குதல் நடந்து வருவதால், உடல்கள் மீட்கப்படவில்லை” என்று கூறினார்.

இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் 4 சடலங்கள் காணப்பட்டதாகவும் அது பாகிஸ்தானின் சிறப்பு பணிகள் குழுவின் கமாண்டோக்களின் சடலமாகவோ அல்லது பயங்கரவாதிகளின் சடலமாகவோ இருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் துருப்புகள் உடல்களைத் தேடும் நடவடிக்கையில் இறங்கி சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ரானுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்தியா கொத்து குண்டுகளை பயன்படுத்தியது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய ராணுவம், இது பொய் என்றும் வஞ்சகம் மற்றும் மோசடி என்றும் நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஊடுருவல்கள் மூலம் பயங்கரவாதிகளை அனுப்ப முயற்சிக்கிறது. அதோடு அவர்களுக்கு ஏராளமான ஆயுதங்களை அளித்து உதவி செய்கிறது. பல ராணுவ இயக்குனரக நடவடிக்கைகளின் பேச்சுவார்த்தையின் போது, இந்தியா அதற்கு பதிலளிக்கும் உரிமையை காத்து வருகிறது. இது போன்ற பதில்கள் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் ஊடுறுவும் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ இலக்குகளுக்கு எதிராக இருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவால் கொத்து குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானின் மற்றொரு பொய், வஞ்சகம், மோசடி  என்று இந்திய ராணுவம் தனது அறிக்கையில் கூர்மையான வார்த்தைகளில் சொன்னது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தனது டுவிட்டர் பக்கத்தில், “எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து இந்திய பாதுகாப்பு படைகள் கொத்து குண்டுகளை பயன்படுத்துவதை கடுமையாக கண்டிப்பதாகவும், இது ஜெனீவா மாநாடு மற்றும் சர்வதேச சட்ட விதிகளின்படி தெளிவான விதி மீறல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், “சர்வதேச மரபுகளை மீறும் இந்திய இராணுவம் கொத்து குண்டுகளை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கான தீர்மானத்தை எந்த ஆயுதமும் அடக்க முடியாது. ஒவ்வொரு பாகிஸ்தானியரின் இரத்தத்திலும் காஷ்மீர் ஓடுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாக்கிஸ்தானிய துருப்புக்கள் மோட்டார் ஷெல் மற்றும் சிறிய ஆயுதத் தாக்குதல்களை மேற்கொண்டன. இந்த விதி மீறல் தாக்குதல் மீறல் காலை 8.15 மணிக்கு தொடங்கியது என்றும் இதற்கு இந்திய துருப்புகள் பதிலடி கொடுத்தாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினரின் தனித்தனி தாக்குதல்களில் 4 ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸினிப்பர் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் பாகிஸ்தான் அடையாளங்கள் கைப்பற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Indian army retaliatory response to attempts of pakistans border action team

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X