scorecardresearch

இந்திய எல்லையில் பதற்றம்… சீனாவுக்கு எதிராக ராணுவம் குவிப்பா?

உண்மையான எல்லைக் கோடு , பிங்கர் 8 பகுதி வரை நீட்டிப்பதாக இந்தியாக தெரிவித்து வருகிறது. இருப்பினும்,பிங்கர்- 4 பகுதி வரை மட்டுமே இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது .   

இந்திய எல்லையில் பதற்றம்… சீனாவுக்கு எதிராக ராணுவம் குவிப்பா?

கடந்த வாரம், கிழக்கு லடாக்கில் அமைந்திருக்கும் பாங்கோங் சோவின் வட கரையில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு கைகலப்பு ஏற்பட்டது.

கடந்த மே 5-6 தேதிகளில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல். ஏ.சி) இருபுறம் உள்ள படை வீரர்களுக்கு பிங்கர்- 5 என்று அழைக்கப்படும் பகுதிக்கு அருகே ஏற்பட்ட மோதல் சம்பவம் முடிவுக்கு வந்தது என்று அறிவிக்கப்பட்டாலும்  இப்பகுதியில் பதட்டங்கள் இன்னும் அதிகரித்து காணப்படுவதாக தோன்றுகிறது.

வழக்கமாக, இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகள் காலாட்படை பட்டாலியனால் நிர்வகிக்கப்படுகிறது. இருப்பினும், திடீர் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கில், கூடுதல் படை வீரர்களும்  நிறுத்தப்படுகின்றனர்.  ஏப்ரல் பிற்பகுதியில் நடந்த பதட்டங்களுக்குப் பிறகு, இந்த பகுதியில் சீனாவும் தனது இருத்தலை அதிகரித்துள்ளது.

இருப்பினும், இந்த பகுதியில் ராணுவம் படையை குவிக்கவில்லை என்று இந்திய இராணுவம்  தெளிவுபடுத்தியுள்ளது. இராணுவ செய்தி தொடர்பாளர் கோலோனல் அமன் ஆனந்த் ” பாங்கோங் சோ பகுதியில் எந்த பதற்றமும் இல்லை” என்று கடந்த செவ்வாய்க் கிழமை தெரிவித்தார்.

உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஏ.சி ) பாங்கோங் சோ ஏரியை இரண்டாக பிரிக்கிறது. ஏரியின் 45 கி.மீ நீளமுள்ள மேற்கு பகுதியை இந்திய கட்டுப்பாட்டிலும், மீதமுள்ளவை சீன கட்டுப்பாட்டிலும் உள்ளன. சீனாவின் திட்டமிட்டு எந்தவொரு தாக்குதலிலும் பயன்படுத்தக்கூடிய முக்கிய அணுகுமுறைகளில் (சுஷுல் அணுகுமுறை) இந்த எல்லைப் பகுதி அமைந்துள்ளது.

எல்.ஏ.சி , பிங்கர் 8 பகுதி வரை நீட்டிப்பதாக இந்தியாக தெரிவித்து வருகிறது. இருப்பினும், தற்போது வரை பிங்கர்- 4 பகுதி வரை மட்டுமே இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.

சீனாவின்  எல்லை பிரிவு பிங்கர் 8-ல் அமைந்திருப்பதாகவும், அதே நேரத்தில், இந்தியாவின்  எல்லைப் பிரிவு பிங்கர் 3-க்கு அருகில் அமைந்துள்ளதாக சீனா தெரிவித்து வருகிறது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பிங்கர் 2 வழி செல்வதாக சீனா கருதுகிறது. இந்த வேறுபட்ட கருத்துகளினால், இந்த குறிப்பிட்ட பகுதி சர்ச்சைக்குரியதாக உள்ளது.  வழக்கமான, ரோந்து பணிகள் மேற்கொள்வது மூலம் இரு படைகளும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது

இந்திய  இராணுவம்  ஒரு அறிக்கையில்”எல்லைப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாததால், இந்த பகுதிகளில்  தற்காலிக மற்றும் குறுகிய கைகலப்பு  ஏற்படுகின்றன.  பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு,நிறுவப்பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில், கைகலப்பு  சம்பவங்கள் தீர்க்கப் படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாங்கோங் த்சோ பகுதியில், ஃபிங்கர் 8 வரை இந்திய ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டதால்  சீனா ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்த பகுதிகளில் பதட்டமான சூழல் உருவாகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .இந்தியாவின் ரோந்து நடவடிக்கையை ஃபிங்கர் 2 க்கு அப்பால் செல்வதை சீனா நிறுத்த முயல்கின்றது.

சீனர்கள் வழக்கமாக, சாலையில் இரண்டு மூன்று இலகுரக வாகனங்களில் ரோந்து நடவடிக்கையை மேற் கொள்கின்றது. இந்திய எல்லைக்குள் அமைந்திருக்கும் இந்த 5 கி.மீ தூரமுள்ள சாலை 1999 ஆம் ஆண்டில் கார்கில் போரின்போது சீனாவால் கட்டப்பட்டது.

இந்திய ரோந்துகளை சீனா கட்டுப்படுத்த தொடங்கியதை அடுத்து, இந்திய அவ்வப்போது பதிலடி கொடுக்க அரம்பித்தது.சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, சீனா ராணுவம் இதேபோல் ஃபிங்கர் 4 இல் கட்டுமானத்தை மேற்கொள்ள முயன்றபோது,  இந்திய ராணுவம் அதை வெற்றிகரமாக முறியடுத்தது.

கடந்த மே 5-6 இரவுகளில் , தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டபடி, இரு தரப்பு வீரர்களுக்கு இடையே உடல் ரீதியான சண்டை ஏற்பட்டது. வெளவால்கள், உலோகக் கம்பிகள் மூலம் சீனப் படையினர்  தாக்குதல் நடத்தியதில் மூத்த அதிகாரிகள் உட்பட பல வீரர்கள் காயமடைந்தனர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில், பல சீன வீரர்கள் காயமடைந்தனர்.

அதற்கு முன்னதாக, ஒரு மூத்த அதிகாரி பயணம் செய்த  இந்திய இராணுவ ஹெலிகாப்டரை இரண்டு சீன இராணுவ ஹெலிகாப்டர்கள் சுற்றி வளைப்பது போல் அருகில் வந்தது. சீன ஹெலிகாப்டர்கள் இந்திய ஹெலிகாப்டருக்கு அருகில் ஆபத்தான முறையில் வந்ததாகவும், விமானத்தில் இருந்த சீனப் பணியாளர்கள் ஆக்ரோஷமான சைகைகளைச் செய்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, லே விமான நிலையத்திலிருந்து IAF இன் இரண்டு Su-30MKI யும் இப்பகுதியில் வான்வழி மூலம் கண்காணித்தது. இருப்பினும், இரு தரப்பில் இருந்து வான்வெளி எல்லை மீறல் இல்லை என்று இந்திய விமானப்படை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்போதுள்ள ஏற்பாட்டின் கீழ், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல். ஏ.சி) இருபுறமும் 10 கி.மீ தூரத்திற்குள் முன் அறிவிப்புமின்றி போர் விமானங்கள் வர முடியாது. ஹெலிகாப்டர்களைப் பொறுத்தவரை, எல்.ஐ.சியில் இருந்து பராமரிக்க வேண்டிய தூரம் 1 கி.மீ ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Indian army says no continuing faceoff and no build up of armed troops at pangong tso190891