இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும், தனது வாழ்நாளில் அதிகப்படியான நன்கொடை அளித்தவருமான ரத்தன் டாடா கடந்த இரு தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவரது மரணம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 86 வயதில் மரணமடைந்த ரத்தன் டாடா இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத நிலையில், 4 காதல் தோல்விகளை சந்தித்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
150 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியம் கொண்ட டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, சிறுவயதில் பெற்றோரை பிரிந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். பாட்டி இந்தியாவில் வசித்து வந்த நிலையில், ரத்தன் டாடா லாஸ் ஏஞ்சல்ஸில் படித்து வந்துள்ளார். அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்த அவர், திருமணம் வரை சென்றுள்ளார். ஆனால் அப்போது அவர் தனது பாட்டியுடன் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா வந்த ரத்தன் டாடா, காதலி இந்தியா வந்தவுடன் அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார். ஆனால் அப்போது இந்தியா – சீனா போர் தொடங்கியதால், ரத்தன் டாடா காதலியை அவரது பெற்றோர் இந்தியா அனுப்ப மறுத்துள்ளனர். இதன் காரணமாக ரத்தன் டாடா காதல் தோல்வியில் முடிந்துள்ளது. அதன்பிறகு, பிரபல நடிகை சிமி கரெலாலுவை காதலித்துள்ளார். இந்த காதலும் திருமணம் வரை செல்லாமல் தோல்வியில் முடிந்துள்ளது.
தொழில்துறையில் சாதித்து தனது தொழிலை மேலும் பன்மடங்கு உயர்த்திய ரத்தன் டாடா 4 முறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார். ஆனாலும் அதை பற்றி அவர் கவலைப்படமாமல், தனது தொழில் கவனம் செலுத்தி, சிறந்த தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். இவருக்கு 4 முறை திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் நடைபெறாமல் போயுள்ளது. ஒரு கட்டத்தில் பிஸினஸ் மீது அதிக கவனம் செலுத்திய டாடா, அதில் முழுவதுமாக இறங்கியதால் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சிந்திக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியதாக பலரும் பேசி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“