நடிகை ஸ்ரீதேவியின் சந்தேக மரணம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்காக, துபாய் சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை)உணர்வற்ற நிலையில் ஓட்டல் குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. மேலும், அவரது உடலில் மது கலந்திருப்பதாகவும் அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சில ஊடகங்கள் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி படுத்திருப்பது போலவும், டம்ளரில் மது இருப்பது போலவும் காட்சிகளை வைத்து செய்தி வெளியிட்டன.
Advertisment
Advertisements
ஏபிபி நியூஸ் சேனல், குளியலறையில் ஸ்ரீதேவியின் புகைப்படம் இருப்பதுபோன்ற புகைப்படத்துக்கு முன் தொகுப்பாளர், ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்திருக்கும் என விவரித்தார். அதிலிருந்த குளியல் தொட்டியில் மது டம்ளர் இருந்தது.
டிவி9 தொலைக்காட்சியில், குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி இறந்து கிடப்பதுபோலவும், அதனை போனி கபூர் பார்ப்பதுபோலவும் திரையில் காண்பித்தது. அத்தொட்டியில் மதுபாட்டில்களும் இருந்தது.
சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சியில், குளியல் தொட்டியின் அளவுகள், ஸ்ரீதேவியின் உயரம் ஆகியவற்றை தொகுப்பாளர்கள் ஆய்வுசெய்து கொண்டிருந்தனர்.
மஹா நியூஸ் சேனல் நிருபர் குளியல் தொட்டியில் படுத்தே, ஸ்ரீதேவி இப்படித்தான் அதில் விழுந்து இறந்திருப்பார் என விவரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரிபப்ளிக் டிவியில் விவாத நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள், ஸ்ரீதேவிய்ன் மரணத்தை சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்துடன் தொடர்புப்படுத்தி பேசினர்.