சிங்கப்பூரில் இரண்டு மைனர் பெண்களிடம், பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியாவைச் சேர்ந்த செஃப்-க்கு , 3 மாதங்கள் மற்றும் 4 வாரங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
44 வயதான குமார் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் சிங்கப்பூரில் தலைமை சமையற்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் 2 பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி 14 வயதான சிறுமி, சிங்கப்பூரில் உள்ள பூன் கெங் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிந்தார். அப்போது குமார், அவரை தடுத்து நிறுத்தி பேசு முயற்சி செய்துள்ளார். ரயில் நிலையத்திற்குத்தான் வழி கேட்கிறார் என்று அந்த சிறுமி முதலில் நினைத்துள்ளார்.
ஆனால் குமார், அந்த சிறுமியின் அனுமதி இல்லாமல், அவரின் தோளில் கை போட்டு பேசியுள்ளார். மேலும் அந்த சிறுமியை கட்டியணைத்து, முத்தமிடும் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது தொலைபேசி எண்ணை வலுகட்டாயமாக வாங்கியுள்ளார். மேலும் தனது மொபைல் போனில் அந்த சிறுமியையும், தன்னையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். பணத் தேவை இருந்தால், தன்னை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் பயந்துபோன அந்த சிறுமி, வீட்டுக்கு சென்று இது தொடர்பாக அம்மாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அன்று மாலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் குமார் அந்த சிறுமிக்கு வாட்ஸ் ஆப்-யில் குறுச்செய்திகளை அனுப்பி உள்ளார். மேலும் 2 முறை வீடியோ கால் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த நாள் குமாரை காவல்துறை கைது செய்தது. சில நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு, அடிக்குமாடி குடியிருப்பின் லிப்டில் செல்ல 19 வயது பெண் காத்திருந்திருக்கிறார். இந்நிலையில் அவரின், கைகளை, குமார் தொட்டுள்ளார். மேலும் அவர் எந்த நிறத்தை சேர்ந்தவர் என்று விசாரித்துள்ளார். மேலும் அந்த நிறத்தின் மக்கள் மீது தனக்கு காதல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் லிப்டில் ஏறியதும் அவருடன் சேர்ந்து குமாரும் சென்றுள்ளார். அந்த பெண் பேச விரும்பாத போதும் வலுகட்டாயமாக பேசியுள்ளார். மேலும் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இரண்டு முறை முத்தமிடவும் முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் லிப்டில் இருந்து, வீட்டுக்கு சென்ற பெண் இது தொடர்பாக அம்மாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதைத்தொடர்ந்து காவல்துறையினர் குமாரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பால் ஜான் கூறுகையில், ஒரு முறை தவறு செய்து தண்டனைப் பெற்றும் அவர் மாறாமல் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
யாரால் எதிர்த்து பேச முடியாதோ, யார் பயப்படுவார்களோ அவர்களை தேர்வு செய்து குமார் தவறாக நடந்துகொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு , 3 மாதங்கள் மற்றும் 4 வாரங்களுக்கு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“