ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகள் களையப்படும் - இந்திய ராணுவம்
இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறிய ராஜ்நாத் சிங், சீனாவும் அதுபோன்ற அறிக்கையை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறிய ராஜ்நாத் சிங், சீனாவும் அதுபோன்ற அறிக்கையை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட பதட்டங்களைத் தணிப்பதற்காக இந்திய மற்றும் சீன இராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் நேற்று தெரிவித்தது.
Advertisment
இந்தியா- சீனா எல்லைக் கோடு கட்டுபாட்டு பகுதியில், சீனா துருப்புகளின் அத்துமீறலைத் தொடர்ந்து, இந்தியா அதிகமான துருப்புகளை மற்றும் ராணுவ உபகரணங்கள் கொண்டு தனது இருத்தலை ஆழமாக கட்டமைத்துள்ளது.
இந்தியா-சீனா துருப்புகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோ கிளிப் ஒன்று சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து இந்திய இராணுவத்தின் அறிக்கை வெளிவந்தது. வீடியோவின் உள்ளடக்கங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், தற்போதைய சூழலில், எல்லையில் மேலும் பதட்டங்களை அதிகாரிக்கக் கூடிய காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்றும் ராணுவம் வலியுறுத்தியது.
Advertisment
Advertisements
இதற்கிடையில், வீடியோவின் உள்ளடக்கங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதற்கு பதிலளிக்கும் விதமாக, மோதல் தொடர்பான படங்களை சீனர்கள் ட்விட்டரில் வெளியிட்டனர். இதுகுறித்து, இராணுவத்திடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ராணுவம் தனது அறிக்கையில்," இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சனைகளை நிர்வகிப்பது குறித்த நிறுவப்பட்ட நெறிமுறைகளின் கீழ், இராணுவத் தளபதிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை மூலம் வேறுபாடுகள் தீர்க்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு தொடர்பான விசயத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சிகளை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். எல்லைகளில் தற்போதைய நிலைமையைத் தூண்டக்கூடிய காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது,”என்று கூறியது.
இராணுவம் தனது அறிக்கையில்,"தற்போது எந்த வன்முறையும் நடக்கவில்லை" என்று தெரிவித்தது. கடந்த மே 5-6 தேதிகளில் பங்கோங் சோ எரி பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டதை இந்திய இராணுவம் பின்னர் உறுதி செய்தது.
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி செய்தி சேனலிடம் பேசுகையில், எல்லைக் கோடு தொடர்பாக இந்தியாவும் சீனாவும் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டார்.
இராஜதந்திர மற்றும் இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று கூறிய ராஜ்நாத் சிங், சீனாவும் அதுபோன்ற அறிக்கையை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார்.
பாங்கோங் சோ மோதலில் தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில்,“மே 5 அன்று ஃபிங்கர் 4 பகுதியில் இந்திய துருப்புகள் செக் போஸ்ட் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, ஏராளமான சீன துருப்புகள் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.பின்னர் ஏற்பட்ட மோதல்களில் இரு தரப்பு வீரர்களுக்கும் காயம் எற்பட்டது" என்று தெரிவித்தார்.