/indian-express-tamil/media/media_files/jUFMFQ5gjjjJz2GCq4jU.jpg)
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் (Photo: X/ @IndiaCoastGuard)
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய கடலோர காவல்படை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகேஷ் பால் சென்னை வந்திருந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Indian Coast Guard Director General Rakesh Pal dies of ‘cardiac arrest’ in Chennai
இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் பி.டி.ஐ செய்தி நிருவனத்திடம் தெரிவித்தன.
ராகேஷ் பால் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜ்நாத்சிங் எக்ஸ் சமூக வலதளத்தில் எழுதியிருப்பதாவது: “இன்று சென்னையில் இந்திய கடலோர காவல்படையின் டி.ஜி. ராகேஷ் பால்-ன் அகால மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். அவர் ஒரு திறமையான மற்றும் உறுதியான அதிகாரியாக இருந்தார், அவருடைய தலைமையில் இந்திய கடலோர காவல் படை இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் பெரிய முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய கடலோர காவல்படை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகேஷ் பால் சென்னை வந்திருந்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டார்.
மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியீட்டு விழா அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மறைவு குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.