Arun Janardhanan
Indian couple in a 4-year legal fight with UK city council for their children : தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை இறுதியாக ஆகஸ்ட் 2015ம் ஆண்டில் பார்த்ததாக கூறுகின்றனர். 11 வயது மகன், 9 வயது மகள் என இருவரும் தற்போது வேறொருவர் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். தங்களின் குழந்தைகளை பற்றி அவர்கள் கடைசியாக அறிந்து கொண்ட செய்தி, அவ்விருவரும் பாகிஸ்தானிய குடும்பம் ஒன்றில் வசித்து வருகிறார்கள் என்பது தான். 51 வயது தந்தையும், 46 வயது தாயும் தங்களின் குழந்தைகளை பார்ப்பதற்காக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 6 ம் தேதி, குழந்தைகளுக்கான பிரிட்டிஷ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சிக்கும் முன் பர்மிங்காம் குழந்தைகள் அறக்கட்டளை நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் இங்கிலாந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் குழந்தையின் குடியுரிமையை மாற்றுவது ஆழ்ந்த மற்றும் நீடித்த பின்விளைவுகளை ஏற்படுத்துவதாகும் என்றும் இது இந்த வழக்கை "அனைவருக்கும் சவாலானது" என்றும் விவரித்தது, தமிழ் பேசும் பெற்றோருக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்பதையும் கூறியுள்ளது அந்த நீதிமன்றம்.
இது தொடர்பாக இங்கிலாந்தில் இருந்து பேசிய 51 வயது தந்தை, அவர்களின் குழந்தைகள் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிங்கப்பூரில் இருக்கும் அவர் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது அவர் மூன்றாம் முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். அந்த குழந்தையையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டார். ”எனக்கும் திரும்பி செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் என்னுடைய குழந்தைகளுக்காக நான் போராட வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைக்கும் வேலையை பார்த்துக் கொண்டு நான் இங்கேயே தங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
To read this article in English
என்னுடைய மகன் மற்றும் மகள் என்ன ஆனார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்கிறார் சிங்கப்பூரில் இருந்து பேசிய அவருடைய மனைவி. எங்களின் குற்றம் என்ன? அவர்கள் நல்ல பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களின் கல்வி என்ன ஆனது என்றும் தெரியவில்லை என்று கூறியவாறே அவர் அழ துவங்கினார்.
பிரிங்கின்ஹாம் குடும்ப நல நீதிமன்றத்தில், ”இந்திய கன்சுலேட் அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், இந்திய பாஸ்போர்ட்டினை பெற்று, அவர்களை அவர்கள் நாட்டிற்கு அழைத்து செல்வதற்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக” நாங்கள் சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம் என்று கன்சுலேட் ஜெனரால் ஆஃப் இந்தியா கூறுகிறார். இந்த பெற்றோர்களின் நீதி போராட்டத்திற்கு உறுதுணையாக அவர் நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இந்தியாவின் மூவர்ண தேசியக்கொடியின் சிறப்புமிக்க வரலாறு தெரியுமா உங்களுக்கு?
பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்ததற்கான உண்மையான காரணம் இதுவரை நீதிமன்றத்தில் கூறப்படவில்லை. ஆனால் கடந்த டிசம்பரில் வெளியான தீர்ப்பில், அவர்களின் குழந்தைப் பருவம் முடியும் வரையில் வளர்ப்பு பெற்றோர்களின் பராமரிப்பில் தான் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நாகையில் சர்வேயராக பணியாற்றிய அந்நபர் சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளோமா முடித்திருக்கிறார். 2004ம் ஆண்டு அவர் இங்கிலாந்து சென்றிருக்கிறார். 2006ம் ஆண்டு அவருடைய மனைவியும் அவருடன் இங்கிலாந்து சென்றிருக்கிறார். அங்கே தான் அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறந்தது. சட்டத்திற்கு புறம்பாக குடிபெயர்ந்தோர் பட்டியலில் தான் அவருடைய பெயர் இருக்கிறது என்பதால் சட்ட உதவியை நாடி பிர்மிங்காம் சிட்டி கவுன்சிலை 2014ம் ஆண்டு அணுகியுள்ளார்.
அவருடைய குழந்தைகள் படிக்கும் பள்ளியின் நிர்வாகிகள் தான் இந்த அறிவுரையை வழங்கினர் என்று கூறும் அவர், நான் சிட்டி கவுன்சிலை அணுகிய போது, என் குழந்தைகளை வைத்து நான் நிதி உதவி கேட்கின்றேன் என்று நினைத்து என் குழந்தைகளை ஃபாஸ்டர் கேருக்கு அழைத்து சென்றுவிட்டனர்” என்று கூறுகிறார். மேலும் என் மீது எந்த விதமான வழக்குகளும் இல்லை. நிலையை விவரிக்க இண்டெர்ப்ரெடெர்களை எனக்கு சிட்டி கவுன்சில் வழங்கவில்லை. என்னுடைய மனைவிக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கை அவர் ராயல் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்க்கு எடுத்து சென்றுள்ளார். குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெற்றோர்கள் அல்லது உறவினர்களுக்கு தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய வழக்கில் குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் ஹரிஷ் சால்வே, இந்தியாவின் முன்னாள் சாலிசிட்டர் ஜெனரல் மற்றும் குவின்ஸ் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தவர், வாதாடினார். டெல்லியை சேர்ந்த சுரண்யா ஐயர் இந்த வழக்கில் ஹரிஷிற்கு முன்பு வாதாடினார். இது குறித்து சுரண்யா பேசும் போதும் கூட “இங்கிலாந்து நீதிமன்றமும் கூட அவர்களை, சட்டத்திற்கு புறம்பான குடியேறிகள் என்று வகைமைப்படுத்தாத நிலையில், பிர்மிஙாம் சிட்டி கவுன்சில் அவர்களின் குழந்தைகளை ஏன் சிறார் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். மேலும் அந்த சிட்டி கவுன்சில், குழந்தைகளுக்கான குடியுரிமையும் அவர்களின் வளர்ப்பு பெற்றோர்களிடம் தான் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
குழந்தைகளின் அப்பா பார்த்து வந்த பகுதி நேர வேலையையும் நான்கு மாதங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக இழந்துவிட்டார். இந்நிலையில் நாளுக்கு நாள் இங்கிலாந்தில் நான் வசிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.