நிகில் குப்தாவின் வழக்கில் இந்திய நீதித்துறை அதிகாரிகளுக்கு "அதிகாரம் இல்லை" என்று செக் குடியரசின் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சகம் பதிலளித்தது.
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை, இந்திய உளவுத் துறை அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் நியூயார்க்கில் கொலை செய்ய சதி செய்ததாக குப்தா மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டி கைது செய்தனர்.
நவம்பர் 29 அன்று நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்க குற்றப் பத்திரிகையில் இந்திய உளவுத் துறை அதிகாரியின் பெயர் குறிப்பிடாமல் CC-1 என்று குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குப்தா தற்போது பிராகாவின் பன்க்ராக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம், அவரது குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தை அணுகி, அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில், செக் குடியரசில் அவருக்கு எதிரான ஒப்படைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுவை ஜனவரி 4-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
குப்தாவின் குடும்பத்தினரின் ஹெபியஸ் கார்பஸ் மனு பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செக் நீதி அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த செக் நீதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விளாடிமிர் ரெப்கா கூறுகையில், “ இந்த வழக்கில் இந்திய அரசின் எந்த நீதித்துறை அதிகாரிகளும் அதிகார வரம்பு இல்லை, இந்த வழக்கு செக் குடியரசின் திறமையான அதிகாரிகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று கூறினார்.
கடந்த வாரம், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், முதலில் மனுதாரரை செக் குடியரசில் உள்ள "சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை" அணுகுமாறு கேட்டுக் கொண்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி. ஆர்யமா சுந்தரத்திடம் நீதிபதி கன்னா கூறுகையில்,
நீங்கள் முதலில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்... நாங்கள் இதற்கெல்லாம் செல்ல மாட்டோம். இங்கு எங்களுக்கு தீர்ப்பு வராது.
இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் அல்லது எந்த அமைச்சகமும் உள்ளே வருவது மிகவும் சென்சிடிவ் ஆன விஷயமாக இருக்கும். இதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றுகூறினார். இருப்பினும், பின்னர், இந்த வழக்கை ஜனவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக பெஞ்ச் ஒப்புக்கொண்டது.
மனுவில், குப்தாவின் குடும்பத்தினர் கைது வாரண்ட் இல்லாதது, நீதிமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாதது மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் தூதரக அணுகல் மறுப்பு, விசாரணையை நியாயமானதாக வழங்க வில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் குப்தா சைவ உணவு உண்பவராக இருந்தும் அவருக்கு கட்டாயப்படுத்தி இறைச்சி சாப்பிட வைப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த குற்றச் சாட்டுகளுக்கு பதிலளித்த செய்தித் தொடர்பாளர், “செக் குடியரசின் நீதி அமைச்சகத்திடம் இதுகுறித்தான புகார் அல்லது தகவல் இல்லை. அல்லது திரு நிகில் குப்தா அல்லது அவரது பாதுகாப்பு ஆலோசகரிடம் இருந்து குடியரசின் தூதரக அலுவலகத்தை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று புகார் எதுவும் வரவில்லை. அதே போல், நிகில் குப்தாவுக்கு முறையற்ற உணவு வழங்கப்பட்டதாக புகார் எதுவும் வரவில்லை என்று கூறினார்.
எவ்வாறாயினும், செக் சட்டத்தின்படி, "கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை, அவர் அறிவிக்கப்பட்ட தேசத்தின் தூதரக அலுவலகத்தைப் பெறுவதற்கும், இந்த தூதரக அலுவலகத்துடன் தொடர்புகொள்வதற்கும் உரிமை உண்டு" என்று ரெப்கா மேலும் கூறினார்.
"கைது செய்யப்பட்ட நபருக்கு இந்த உரிமை குறித்து அறிவுரை வழங்கப்பட வேண்டும் மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான முழு வாய்ப்பையும் வழங்க வேண்டும்" என்று அவர் எழுதினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/indian-courts-have-no-jurisdiction-in-guptas-case-czech-ministry-9075235/
செய்தித் தொடர்பாளர் ரெப்கா மேலும் கூறுகையில், அமெரிக்க அதிகாரத்தின் வேண்டுகோளின் பேரில், ஜூன் 30 அன்று ப்ராக்கில் அவர் தரையிறங்கியதும், குப்தா கைது செய்யப்பட்டு தற்காலிக காவலில் வைக்கப்பட்டார் என்று கூறினார். மற்றவருக்காக கொலை செய்ய சதி செய்த குற்றத்திற்காக குப்தா கைது செய்யப்பட்டார் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.