இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிட்சின் தடுப்பூசி கோவாக்சின் வழங்குவது தொடர்பாக பாரத் பயோடெக்கின் நோக்கங்களைப் பற்றி சில மாநிலங்கள் புகார் கூறுவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாரத் பயோடெக் கூட்டு நிர்வாக இயக்குனர் சுசித்ரா எலா அவர் தனது ட்விட்டர் பதிவில், கூறுகையில், இந்நிறுவனம் ஏற்கனவே மே 10 ஆம் தேதி 18 மாநிலங்களுக்கு கோவாக்சின் மருந்துகளை அனுப்பியுள்ளது. தொடர்ந்து "18 மாநிலங்கள் சிறிய ஏற்றுமதிகளில் உள்ளன. சில மாநிலங்கள் எங்கள் நோக்கங்களைப் பற்றி புகார் செய்வதைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் ஊழியர்களில் 50 பேர் கோவிட் காரணமாக வேலையில் இல்லை,. ஆனாலும் நாங்கள் 24 × 7 என்ற முறையில் தொற்றுநோய்களின் கீழ் தொடர்ந்து பணியாற்றுகிறோம், ”என்று அவர் என கூறியுள்ளார்.
Covaxin dispatched 10/5/21.18 states have been covered thou in smaller shipments. Quite disheartening to the teams to hear Some states complaining about our intentions. 50 of our employees are off work due to covid, yet we continue to work under pandemic lockdowns 24x7 for U 🇮🇳 pic.twitter.com/FmQl4vtqXC
— suchitra ella (@SuchitraElla) May 11, 2021
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் ஆந்திரா, ஹரியானா, ஒடிசா, அசாம், ஜம்மு & காஷ்மீர், தமிழ்நாடு, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு கோவாக்சின் சப்ளை செய்து வருகிறது. மேலும் சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, திரிபுரா, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சப்ளை செய்ய ஏறபாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடெக் தேசிய தலைநகருக்கு (டெல்லி) "கூடுதல்" கோவாக்சின் அளவை வழங்க முடியாது என்று கூறியுள்ளதாக மு, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியிருந்தார். மேலும் டெல்லியில் கோவாக்சின் தீர்ந்துவிட்டது, இதன் விளைவாக 17 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 100 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன, என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ், கோவாக்சின் உற்பத்தியாளர் ஒரு கடிதத்தில் டெல்லி அரசு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது, ”என்று சிசோடியா குறிப்பிட்டுள்ளர். இதனால் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி, நாட்டில் உள்ள இரண்டு உற்பத்தியாளர்களின் தடுப்பூசி சூத்திரங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து அதிக அளவிலான தடுப்பூசிக்கள் உற்பத்திக்கு வழிசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.