/indian-express-tamil/media/media_files/2025/09/09/cp-radha-krishnan-2025-09-09-20-12-23.jpg)
இந்தியாவின் துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷண் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட, மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் 452 உறுப்பினர்களின் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி தோல்வியடைந்தார்.
முன்னதாக இதற்கு முன்பு துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் குறைவால் பதவியை ராஜினாமா செய்த நிலையில், துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று, கடந்த மாதம் 17-ந் தேதி, பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தார்.
பல தசாப்த கால அரசியல் அனுபவம், களப்பணி மற்றும் மிதமான அணுகுமுறையால் அவர் இந்த உயரிய இடத்தைப் பெற்றுள்ளார். அவரது அரசியல் பயணம் பெரும்பாலும் எளிமையாகவும், அதே சமயம் வியூகமிக்கதாகவும் இருந்துள்ளது. இதனிடையே இன்று நடைபெற்ற இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான நீதிபதி பி. சுதர்சன் ரெட்டிக்கு எதிராக 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில், தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களால் ஒன்றுபடுத்த முடியவில்லை. நீதிபதி ரெட்டிக்கு 324 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவருடைய போட்டியாளரான ராதாகிருஷ்ணன், என்.டி.ஏ கூட்டணி எதிர்பார்த்த வாக்குகளைவிட 13 வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.
மொத்தமுள்ள 781 வாக்காளர்களில், 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. 767 பேர் வாக்களித்தனர். அதில், 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இது அரசியல்சாசனத்திற்கும் ஆா.எஸ்.எஸ் – பா.ஜ.க.வுக்கும் இடையிலான போர் என்று எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை முன்வைத்தன. ஆனாலும் இந்த தேர்தல் அவர்களுக்கு மேலும் ஒரு தோல்வியையே கொடுத்துள்ளது.
2025 துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை எப்போதும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் ஒடுக்கட்டப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் நமது அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த துணைத் தலைவராக இருப்பார் என்று நான் நம்புகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்! அண்ணன் திருவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். துணை ஜனாதிபதி தேர்தலில் மகத்தான ஆதரவுடன் வெற்றி பெற்ற ஏ.வி.எல்., விரைவில் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார், மாநிலங்களவையை வழிநடத்துகிறார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
தமழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு அவர் தனது கடமைகளை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இந்தியாவின் ஜனநாயகத்தின் உணர்வை நிலைநிறுத்தி, நாம் நிலைநிறுத்தும் கொள்கைகளை பிரதிபலிக்கும் உறுதியான போராட்டத்திற்காக சுதர்ஷன் ரெட்டியையும் நான் பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.
அமித்ஷா தனது பதிவில், இந்திய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்ட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எழுந்த ஒரு தலைவராக உங்கள் நுண்ணறிவும், நிர்வாகத்தைப் பற்றிய ஆழமான அறிவும், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சிறந்ததை வெளிக்கொணர்ந்து ஒதுக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் எங்களுக்கு உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேல் சபையின் புனிதத்தின் பாதுகாவலராக உங்கள் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மண்ணின் பெருமைமிகு மைந்தனாகிய அவர், எப்போதுமே, மக்கள் பணிகளில், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டவர். பொது வாழ்வில், தொடக்க நாட்களிலிருந்து, தற்போது நாட்டின் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருப்பது, அவரது கடின உழைப்பிற்கு சிறந்த சான்றாகும் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us