Advertisment

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உளவு பார்த்த இந்திய தூதரக ஊழியர் மாஸ்கோவில் கைது; உ.பி. ஏ.டி.எஸ் அதிரடி

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியரை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
spy arrest 1

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் சத்யேந்திர சிவல் (ATS/Express File Photo)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியரை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: UP ATS arrests Indian embassy worker in Moscow for spying for Pakistan’s ISI

மின்னணு கண்காணிப்பு மற்றும் ஆதாரங்களை சேகரித்த பின்னர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்படும் இந்திய தூதரக ஊழியரைக் கைது செய்துள்ளதாக உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு தடுப்பு படை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாகக் கூறி மாஸ்கோவில் நியமிக்கப்பட்ட இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (எம்.இ.ஏ) ஊழியரை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்) ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாகத் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை குறிப்பிட்டுள்ளபடி, குற்றம் சாட்டப்பட்டவர் சத்யேந்திர சிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் எம்.இ.ஏ-வில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) ஆக பணிபுரிந்தார். சிவல் மீரட்டில் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளது. 

பயங்கரவாத எதிர்ப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் கையாளுபவர்கள், இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் சிலருக்கு இந்திய ராணுவம் மற்றும் ராணுவ உத்திகள் தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட பணத்தைப் பயன்படுத்தியதாக பல ரகசிய வட்டாரங்களில் இருந்து உ.பி. பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. மின்னணு கண்காணிப்பு மற்றும் ஆதாரங்கள் சேகரிப்பு மூலம் ஏ.டி.எஸ் இந்த தகவலை உருவாக்கியது. மேலும், உ.பி.யின் ஹபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யேந்திர சிவல், வெளியுறவு அமைச்சகத்தில் எம்.டி.எஸ் (மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்) ஆக பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டது. இவர் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி புரிந்து வந்தார்.

மேலும், இந்த அறிக்கையில், “அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐ.எஸ்.ஐ அமைப்பினருடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவல்களை ஐ.எஸ்.ஐ அமைப்பினருக்கு பணத்திற்கு ஈடாக வழங்கி வந்தார். அவர் மீரட்டில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு படை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கே அவர் அனுப்பிய தகவல் குறித்து திருப்திகரமான பதில்களை அளிக்கவில்லை. மேலும், விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.” என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில், இந்தியாவைச் சார்ந்த பாதுகாப்பு உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ள சத்யேந்திர சிவல், இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி) பிரிவு 121ஏ மற்றும் அரசு நிர்வாக ரகசியச் சட்டம், 1923-ன் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையின்போது, சத்யேந்திர சிவலிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், ஒரு ஆதார் அட்டை, ஒரு பான் கார்டு, ஒரு அடையாள ஆவணம் மற்றும் ரூ.600 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment