Advertisment

இந்திய தூதரை குருத்வாராவுக்கு அனுமதிக்காத பாகிஸ்தான்: தொடர் அத்துமீறல்கள்

பாகிஸ்தானிற்கான இந்திய தூதுவர் அஜய் பிஸரியாவிற்கு குருத்வாரா செல்ல அனுமதி மறுப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Envoy Ajay Bisaria

Indian Envoy Ajay Bisaria

பாகிஸ்தானில் இருக்கும் இந்திய தூதுவர் அஜய் பிஸரியா அவருடைய பிறந்த நாளன்று குருத்வாரா செல்ல அனுமதி மறுப்பு. இந்திய தூதுவர் அஜய் பிஸரியா மற்றும் அவருடைய மனைவி இருவரும், அஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாண ஹசன் அப்துக் பகுதிக்கு சென்றிருக்கின்றார்கள். பிரார்த்தனை செய்வதற்காக அங்கிருக்கும் குருத்வாரா செல்ல முற்பட்ட போது அவர்கள் இருவரையும் வாகனத்தில் இருந்து கீழே கூட இறங்கவிடவில்லை என்று தகவல்.

Advertisment

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி இருந்தும் அவர்களை குருத்வாரா பஞ்ச சாகிப் ஆலயத்திற்குள் அனுமதிக்கவில்லை. இந்த குருத்வாவில் இரண்டாவது முறையாக பிஸரியாவிற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. கடந்த ஏபர்ல் மாதத்தில் எவாக்கி ட்ரஸ்ட்டிடம் இருந்து முறையாக அனுமதி வாங்கி வந்த பின்பும் அவரை உள்ளே நுழைய விடவில்லை. பாகிஸ்தான் அதிகாரிகள், பாதுகாப்பு காரணமாகவே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறினார்கள்.

இந்தியாவில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ள வந்திருப்பவர்களை வாகா இரயில் நிலையத்தில் இருந்து பாதுகாத்து அழைத்துவரவும் இவர்கள் யாரும் வரவில்லை என்றும், குருத்வாராவிற்கு செல்ல அனுமதி இல்லை என்றும் புனித யாத்ரை வந்தவர்களிடம் இவர்கள் கூறியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு நாட்டுத் தூதுவர் மீதும் நடத்தப்படும் அவமதிப்புகளை பட்டியலிட்டுச் செல்கின்றது. இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் அரசிடம், இந்திய உயர் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பினை ஏற்படுத்தி தர வேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் விகே சிங் பேசுகையில் இரு நாட்டுத் தலைவர்களும் அமர்ந்து பேசினால் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment