தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொலைதூர பழங்குடியினர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு டெலி-மருந்து வழங்குவதற்கு அதிவேக வயர்லெஸ் அமைப்புகளைப் பயன்படுத்தியது முதல் ஒடிசாவின் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மல்கங்கிரியில் நுண்ணீர் பாசனத் திட்டம் தொடங்கியது வரை- பஸ்தாரில் உள்ள ஸ்டார்ட்-அப் இன்குபேட்டர் முதல் ஜார்கண்டின் ஜம்தாராவில் உள்ள முதியோருக்கான கிளப் வரை…
செவ்வாய்கிழமை புது தில்லியில் வழங்கப்பட்ட 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சிறந்த ஆளுமை விருதுகள் வென்ற 19 வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு அடிப்படைக் கொள்கையை எடுத்துக்காட்டுகின்றனர் – அது, நல்ல நிர்வாகம் என்பது ஒரு சாமாணிய பெண் மற்றும் ஆணின் வாழ்க்கையைத் தொடும் ஒரு யோசனையாகும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் வழங்கப்பட்ட விருதுகள், வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, இ- கவர்னன்ஸ், ஆற்றல், பாலினம் மற்றும் உள்ளடக்கம், சுகாதாரம், மத்திய திட்டங்களை செயல்படுத்துதல், புதுமையான கல்வி, புதுமையான திட்டங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், பொது வசதிகள், திறன் மேம்பாடு, சமூக நலன், ஸ்டார்ட் அப்ஸ் & புதுமைகள், நிலைத்தன்மை, சுத்தம், தண்ணீர் போன்ற பிரிவுகளில் நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களைக் கொண்டாடியது.
5 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்தி, தொலைதூரத்தில் உள்ள பழங்குடியின குக்கிராமத்தை அருகில் உள்ள சுகாதார வசதியுடன் இணைத்த எளிய யோசனைக்காக, ஹெல்த்கேர் பிரிவின் கீழ் தமிழ்நாடு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி எச். விருதை வென்றார். இந்த ’புன்னகை’ திட்டத்தைப் பற்றி ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “ஈரோட்டில் உள்ள கத்திரிமலை என்ற தொலைதூர பழங்குடி கிராமத்தில் நாங்கள் தொடங்கினோம், இங்கு அருகிலுள்ள சுகாதார மையம் 30-40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எனவே குக்கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 100 Mbps தடையில்லா வைஃபையைப் பயன்படுத்தி டெலி-ஹெல்த் வசதியைத் தொடங்க முடிவு செய்தோம்” என்றார்.
பாலினம் மற்றும் உள்ளடக்கிய பிரிவில் விருது வென்ற ஒடிசாவின் பலங்கிர் மாவட்ட ஆட்சியர் சஞ்சல் ராணா பேசுகையில்; ஜூலை 2020 இல், திருநங்கைகளுக்குத் திறன்களை வழங்குவதையும், அவர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமான ‘ஸ்வீக்ருதி’யை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.
இந்த சமூகத்திற்கு பலன்களை வழங்கும் பல திட்டங்கள் உள்ளன, ஆனால் இந்த திட்டங்கள் அவர்களை பங்களிக்கக்கூடிய நபர்களாக அங்கீகரிக்கவில்லை.
வாகன நிறுத்துமிடங்களை இயக்குவது அல்லது சுகாதார பணியாளர்களாக பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களை ஓட்டுவது எதுவாக இருந்தாலும், இந்தத் திட்டம் திருநங்கைகள் தொழிலாளர்களின் ஒரு பகுதியாக மாற உதவியுள்ளது, என்று அவர் கூறினார்.

ஜம்தாரா துணை கமிஷனர் ஃபைஸ் அக் அகமது மும்தாஜ், முதியோர்களுக்கான கிளப் துவங்கியதற்காக, ‘சமூக நலன்’ பிரிவிலும், மாவட்டத்தின் ஒவ்வொரு ஊராட்சியிலும் நுாலகம் துவங்கியதற்காக, ‘புதுமையான திட்டங்கள்’ பிரிவில், இரண்டு விருதுகளை வென்றார்.
முதியோருக்கான கிளப் பற்றி அவர் பேசுகையில்; மூத்த குடிமக்கள் பெரும்பாலும் தனிமை, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் கையாள்கின்றனர். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஆனால் மனச்சோர்வை எதிர்த்துப் போராடும் முதியவர்களைக் கண்டபோது, அவர்களில் பலர் கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளைக் கையாளும் போது இந்த திட்டம் உருவானது. அதனால் அவர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், தங்களுக்குள் பழகுவதற்கும் ஒரு இடத்தை அவர்களுக்கு ஏன் வழங்கக்கூடாது என்று நான் நினைத்தாக கூறினார்.
சபரிமலை மலைக் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தும் திட்டத்திற்காக, கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ் ஐயருக்கு ஜூரி சிறப்பு விருது வழங்கப்பட்டது.
29 மாநிலங்களில் உள்ள 182 மாவட்டங்களில் இருந்து வந்த 400 பேரில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விருதுகளுக்கான அறிவுப் பங்காளியான PWC, ஒவ்வொரு திட்டத்திலும் முழுமையான சரிபார்ப்பை ஆய்வு செய்தது, இந்தியன் எக்ஸ்பிரஸின் நிருபர்கள் மற்றும் ஆசிரியர் குழுவால் கள அறிக்கைகள் மூலம் இறுதிப்பட்டியல் சரிபார்க்கப்பட்டது.
சமர்ப்பித்த ஒவ்வொரு திட்டங்களின் விரிவான அறிக்கைகளும் திரையிடப்பட்டு இறுதி வெற்றியாளர்களை, இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஆர் எம் லோதா தலைமையிலான நடுவர் குழு தேர்வு செய்தது.
நடுவர் குழுவில், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா; 2009 முதல் 2011 வரை இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகவும், அமெரிக்கா, சீனாவுக்கான இந்தியத் தூதுவராகவும், இலங்கைக்கான உயர் ஆணையராகவும் இருந்த நிருபமா ராவ்; கே எம் சந்திரசேகர், முன்னாள் அமைச்சரவை செயலாளர்; மற்றும் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் உறுப்பினர் அமர்ஜித் சின்ஹா ஆகியோர் இருந்தனர்.
—அபிநயா ஹரிகோவிந்த் மற்றும் அர்னாப்ஜித் சர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“