தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஞாயிற்றுக்கிழமை (அக்.02, 2022) அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு ieGujarati.com ஐ வெளியானது.
இது, மலையாளம், தமிழ் மற்றும் வங்காளம் ஆகிய பிராந்திய மொழிகளுக்குப் பிறகு, எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நான்காவது பிராந்திய மொழி இணையதளம் ஆகும்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் ieGujarati.com தனது தனித்துவமான பாணியிலான புலனாய்வு மற்றும் விளக்க இதழியலை மையமாகக் கொண்டு செயல்படுவதில் கவனம் செலுத்தும்.
அதே நேரத்தில், குஜராத் வாசகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழக்கமான கட்டுரைகள், மற்றும் தனித்துவமான தொடர்கள் IeGujarati.com -ல் இடம்பெறும். மேலும், உலகம் முழுவதிலும் இருந்து செய்திகளை உடனுக்குடன் வழங்கும்.
இந்தப் புதிய ஆன்லைன் பதிப்பு குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா கூறுகையில், “தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குஜராத்தி மொழியுடனும் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. ஏற்கனவே தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் 1991இல் குஜராத்தி பதிப்பை வெளியிட்ட முதல் வணிக நாளிதழாகும்.
இது, மாநிலம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து வெளியிடப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வதோதரா மற்றும் அகமதாபாத் இரண்டிலும் பிரபலமான பதிப்புகளைக் கொண்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, “எங்களது நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் அச்சமற்ற இதழியலை மாநிலத்திற்கு அதன் சொந்த மொழியில் கொண்டு வருவதற்காக நாங்கள் ieGujarati.com ஐ தொடங்குகிறோம் .
இது அனுபவமுள்ள பத்திரிகையாளர்கள் குழுவால் நேரடியாக அகமதாபாத்தில் இருந்து வெளியிடப்படும். இந்தப் புதிய பயணத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இது குஜராத் மற்றும் நாட்டின் குறிப்பிட்ட செய்தித் தேவைகளுக்கு சேவை செய்ய எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மற்றொரு முயற்சியாகும்” என்றார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 90 ஆண்டுகளுக்கும் மேலான தனித்துவ பாரம்பரியத்துடன், துணிச்சலான அறவழியில் இதழியல் துறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு உலகெங்கிலும் 200 மில்லியனுக்கும் (20 கோடி) மேலான வாசகர்கள் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil