இந்திய சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக இந்திய அரசு, 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது இந்திய அரசு. இந்நிலையில் தடை செய்யப்பட்ட செயலிகளின் க்ளோன்கள் அதிக அளவில் செயல்பாட்டில் இருந்தது. அதாவது உண்மையான செயலியை பிரதிபலிக்கும் வகையில் அப்படியே செயல்படும் போலி செயலிகள். இவ்வாறான 47 செயலிகளுக்கு மத்திய அரசு வெள்ளி கிழமையன்று தடை விதித்துள்ளது மத்திய அரசு.
இத்தனை செயலிகளின் செயல்பாடு தற்போது முடங்கியுள்ள நிலையில் இந்த பட்டியலில் மேலும் 275 சீன செயலிகள் இடம் பெற்றுள்ளது. இதன் தகவல்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே வரும் நாட்களில் அந்த செயலிகளுக்கும் தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று செனெட் உறுப்பினர்கள் அதிபர் ட்ரெம்ப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஃப்ரான்ஸை மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்19… அனைவருக்கும் இலவச பரிசோதனை அறிவிப்பு